புடு எல்ஆர்டி நிலையம்

உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

புடு எல்ஆர்டி நிலையம்map
Remove ads

புடு எல்ஆர்டி நிலையம் அல்லது புடு போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Pudu LRT Station; மலாய்: Stesen LRT Pudu; சீனம்: 半山芭站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் AG10 SP10 புடு, பொது தகவல்கள் ...

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களையும் ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.

Remove ads

பொது

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பிளாசா ராக்யாட் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள புடு சாலையின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. ஆங் துவா நிலையத்திற்கு அருகில் இந்த புடு எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிலையம் புடு பகுதிக்குச் சேவை செய்யும் அம்பாங்; செரி பெட்டாலிங் வழித்தட நிலையங்களில் ஒன்றாகும்; மற்றவை ஆங் துவா நிலையம் மற்றும் சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு நிலையங்கள் ஆகும்.

Remove ads

அமைவு

புடு எல்ஆர்டி நிலையம் என்பது புடு நகரத்தின் எதிரே உள்ள கடைவீதிகளின் வரிசைக்குப் பின்னால், சரவாக் சாலையின் மருங்கில் அமைந்துள்ளது.

அத்துடன், நிலையத்தின் தென்மேற்கில் உள்ள சான் பெங் சாலை வழியாகவும்; நிலையத்தின் தென்கிழக்கில் உள்ள சுங்கை பீசி வழியாகவும் இந்த நிலையத்தை அணுகலாம்.[3]

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.

காட்சியகம்

புடு எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2024)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads