புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் அமைந்துள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி (J.J. College of Arts and Science) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சிவபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6][7][8] புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 1994 -ஆம் ஆண்டு சனவரி மாதம் 17-ஆம் நாள் அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் க. பொன்னுசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுகையின்கீழ் செயல்படுகிறது.[9][10] கல்லூரியில் கலை, வணிகம், அறிவியல் படிப்புகள் இளநிலை, முதுநிலையில் கற்பிக்கப்படுகின்றன.
Remove ads
நிர்வாகம்
கற்பக விநாயகா அறக்கட்டளை மூலம் ஜெ. ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியினை நிறுவியவர் சே. இரகுபதி ஆவார். இவர் முன்னாள் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற அமைச்சராகவும், திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் இந்திய அரசாங்கத்தில் பதவி வகித்தார். தற்பொழுது இவர் தமிழக அமைச்சரவையில் சட்ட அமைச்சராக உள்ளார்.
கல்லூரியின் தரம்
1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2003ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் தரக்குறியீட்டில் பி++ அங்கீகாரத்தை முதன்முதலில் பெற்றது. மீண்டும் 2009 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஏ தரக்குறியீட்டை பெற்றது. 19.10.2012 முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமும் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
Remove ads
கல்லூரி பாடப்பிரிவுகள்
- இளங்கலை வகுப்புகள்
- முதுகலை வகுப்புகள்
- மேலாண்மை வகுப்புகள்
- ஆய்வியல் நிறைஞர் வகுப்புகள்
- முனைவர் பட்ட வகுப்புகள்
வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்
- மத்தியக் கல்விப்பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளி
- மெட்ரிக் பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளி
- செவிலியர் கல்லூரி
- கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பொறியியல் கல்லூரி
முக்கிய நிகழ்வுகள்
உயிரிதொழில்நுட்பவியல் தொடர்பான தேசிய மாநாடும் [11] சமுதாயக் கல்லூரி துவக்கவிழாவும் இக் கல்லூரியில் நடைபெற்றன.[12]
விளையாட்டு
கல்லூரியானது மண்டலங்களிடையிலான துடுப்பாட்டம் [13] மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடுகிறது. 2017 ஆம் ஆண்டில் இல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[14]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads