புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி, ஞானபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூய சவேரியார் மகளிர் கல்லூரி, ஞானபுரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தின் ஞானபுரத்தில் உள்ள ஒரு மகளிருக்கான தன்னாட்சி கல்லூரி ஆகும். கத்தோலிக்க மத நிறுவனமான அன்னேசியின் தூய சவேரியார் சகோதரிகளால் 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கல்லூரியே விசாகப்பட்டினத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கடற்கரை ஆந்திரப் பிரதேசம் முழுமைக்கும் ஆரம்பிக்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரியாகும்.[1] சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகமும் 2500 மாணவர்களையும் கொண்டுள்ள இக்கல்லூரி, அரசு உதவி பெறும் கிறித்தவ சிறுபான்மை நிறுவனமாகும்.
Remove ads
அங்கீகாரம்
1987 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா) தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் ஏ தரம் வழங்கப்பட்டு மறு அங்கீகாரம் பெற்றுள்ளது.[2][3]
மூன்று இடைநிலை படிப்புகள், கலை, அறிவியல், வணிகம் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் 12 இளங்கலை படிப்புகள் மற்றும் ஆறு முதுகலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு மதிப்பு சேர்க்கவும், மேம்பட்ட வேலைவாய்ப்புக்கு' வழிவகுக்கவும் தேவையான சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளையும் பயிற்றுவிக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads