பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்

ஐஓஐ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் From Wikipedia, the free encyclopedia

பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்map
Remove ads

ஐஓஐ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: IOI Puchong Jaya LRT Station; மலாய்: Stesen LRT IOI Puchong Jaya; சீனம்: IOI 蒲种再也) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.

விரைவான உண்மைகள் SP24 பூச்சோங் ஜெயா, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.

Remove ads

பொது

2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.[3][4]

11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையத்திற்கு அருகில் ஐஓஐ வணிக வளாகம் (IOI Mall) உள்ளது. பூச்சோங் ஜெயா நகரின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.

Remove ads

கட்டுமானம்

செரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம்[5] ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd);[6] ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.5

2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன[7]. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.[8][9]

Remove ads

கட்டிடக்கலை

பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.[10]

சேவைகள்

ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.

மேலதிகத் தகவல்கள் திறப்பு, மூடுதல் ...
Remove ads

பேருந்து சேவைகள்

Remove ads

அமைவு

இந்த நிலையத்திற்கு முன்னதாக  SP25  பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக  SP22  கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையமும் உள்ளன.

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

Remove ads

காட்சியகம்

பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads