பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம்

மலேசியா, சிலாங்கூர், பூச்சோங், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் இலகு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம்map
Remove ads

பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Puchong Prima LRT Station; மலாய்: Stesen LRT Puchong Prima; சீனம்: 蒲种百利玛) என்பது மலேசியா, சிலாங்கூர், பூச்சோங், பூச்சோங் பிரிமா, செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[3]

விரைவான உண்மைகள் SP29 பூச்சோங் பிரிமா, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், பூச்சோங் பிரிமா நகர்ப் பகுதியில், பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம்; புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[4]

கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இந்த நிலையத்தில் 2 பக்கவாட்டுத் தளங்கள்; மற்றும் 2 வழித்தடங்கள் உள்ளன. இந்த நிலையம் மின்படிக்கட்டுகள், சுமைதூக்கிக்கள் மற்றும் படிக்கட்டுகள் மூலம் தெரு சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

பொது

ஒரு பாதசாரி பாலம், பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய் நகரத்தில் உள்ள கடைகள்; உள்ளூர் பல்பொருள் அங்காடி கடைகளுடன் இணைக்கிறது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் இந்த நிலையம் கட்டப்பட்டது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.

இந்த நிலையம் ஓடிகே பல்பொருள் அங்காடி (OTK Supermarket), தாமான் பூச்சோங் பிரிமா, தேசா இடாமான், பங்சாபுரி லில்லி, பங்சாபுரி எலினா மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ளது. இது தவிர, இந்த நிலையம் புக்கிட் பூச்சோங், தாமான் தாசிக் பிரிமா, மெராந்தி ஜெயா, தாமான் பூச்சோங் பெர்மாய் மற்றும் பல குடியிருப்புப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.

Remove ads

வரலாறு

செரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களின் நீட்டிப்பு ஆகத்து 29, 2006 அன்று, அப்போதைய மலேசிய துணைப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் அவர்களால் அறிவிக்கப்பட்டது.[5]

இதை அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி அவர்கள் 2006-ஆம் ஆண்டு தன் மலேசிய வரவு செலவு திட்ட உரையில் உறுதிப்படுத்தினார்.[6]

கட்டுமானம்

ரிங்கிட் RM 955.84 மில்லியன் மதிப்புள்ள இந்த நீட்டிப்புத் திட்டம், ஜோர்ஜ் கென்ட் (George Kent Bhd); மற்றும் அதன் கூட்டு அமைப்பான லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd) ஆகியவற்றின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.[7] கட்டுமானம் 2010-இல் தொடங்கியது.

அதே நேரத்தில் தொடருந்துகளின், தவறு இல்லாத சோதனை ஓட்டங்கள் 22 சனவரி 2016 அன்று தொடங்கியது. [8] சில தாமதங்களைச் சந்திக்க நேர்ந்தாலும்,[9] நீட்டிப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த நிலையம் மார்ச் 31, 2016 அன்று திறக்கப்பட்டது.[10][11][12]

நிலைய அமைப்பு


G தெரு நிலை பயணிகள் இறங்கும் இடம், பேருந்து நிறுத்தம், பேருந்து தகவல் மையம், சில்லறைக் கடை, அஞ்சல் மையம்
C ஒருங்கிணைவு நிலை பயணச்சீட்டு தானியங்கி, தானியங்கி கட்டணக் கடவுகள், வாடிக்கையாளர் சேவை நிலையம், பாதசாரி பாலம்
P பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும்
நடைபாதை 1 4  செரி பெட்டாலிங் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் (பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம்)
நடைபாதை 2 4  செரி பெட்டாலிங் புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் (முடிவகம்)
பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல்
Remove ads

நிலைய நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், அமைவு ...

பேருந்து சேவைகள்

உதவி பேருந்துகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

வேறு பேருந்துகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, இலக்கு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads