பூச்சோங் பெர்டானா

சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குட From Wikipedia, the free encyclopedia

பூச்சோங் பெர்டானாmap
Remove ads

பூச்சோங் பெர்டானா, (மலாய்: Bandar Puchong Perdana; ஆங்கிலம்: Puchong Perdana; சீனம்: 蒲种再也); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்புத் திட்டமாகும்.

விரைவான உண்மைகள் பூச்சோங் பெர்டானா Puchong Perdana, நாடு ...
Thumb

இது பூச்சோங் வட்டாரத்தின் தொடக்ககால குடியிருப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.[2]

1980-களின் பிற்பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அந்த நேரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பிற பகுதிகள் சீரான வளர்ச்சியைக் கொண்டிருந்தன; எனினும் பூச்சோங் பெர்டானா மட்டும் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது.

Remove ads

பொது

பூச்சோங் பெர்டானாவின் நுழைவாயில் பகுதிக்கு முன்னால் ஓர் ஏரியின் ஓரத்தில் கம்பீரமான பூச்சோங் பெர்டானா பள்ளிவாசல் (Masjid Puchong Perdana) உள்ளது. பூச்சோங் பெர்டானாவில் பெட்ரோனாஸ் நிலையம், கால்டெக்ஸ் நிலையம், எஸ்ஸோ போன்ற பெட்ரோல் நிலைய வசதிகள் உள்ளன.

மேலும் மெக்டொனால்ட்சு, கே எப் சி போன்ற உணவகங்களும் பூச்சோங் பெர்டானாவில் காணப்படுகின்றன.[3]

பூச்சோங் பெர்டானா பகுதியில் ஓர் இடைநிலைப் பள்ளியும் இரண்டு தொடக்க நிலைப் பள்ளிகளும் உள்ளன; அவை பூச்சோங் பெர்டானா தேசிய இடைநிலைப் பள்ளி (SMK Puchong Perdana); பூச்சோங் பெர்டானா தேசியப் பள்ளி (SK Puchong Perdana); மற்றும் பூச்சோங் இண்டா தேசியப் பள்ளி (SK Puchong Indah).

Remove ads

மக்கள் தொகை

பூச்சோங் பெர்டானாவின் 2020 மக்கள் தொகை 90,718 ஆகும். அதில் மலாய்க்காரர்கள் 47%, அதைத் தொடர்ந்து சீனர்கள் 27%, இந்தியர்கள் 15% மற்றும் பிற இனத்தவர்கள் 1%ஆவார்கள்.[4]

பூச்சோங் பெர்டானா தற்போது, தொழில் துறை, தகவல் தொடர்புத் துறை, வணிகம் மற்றும் பிறவற்றுக்கான இடமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சுபாங் ஜெயா மாநகராட்சி

பூச்சோங் பெர்டானா; மற்ற பூச்சோங் வட்டார இடங்களைப் போல சுபாங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த மாநகராட்சியில் 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

  1. பூச்சோங் மக்களவைத் தொகுதி
  2. சுபாங் மக்களவைத் தொகுதி
  3. கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி

பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள். பூச்சோங் நகர மையம் (Pusat Bandar Puchong) பெரும்பாலும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் அமைந்து உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads