பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Puchong Perdana LRT Station; மலாய்: Stesen LRT Puchong Perdana; சீனம்: 蒲种柏兰岭轻轨站) என்பது மலேசியா, சிலாங்கூர், பூச்சோங், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.

இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் நகர்ப் பகுதியில், பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம்; பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[2]
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இந்த நிலையத்தில் 2 பக்கவாட்டுத் தளங்கள்; மற்றும் 2 வழித்தடங்கள் உள்ளன.
Remove ads
பொது
இந்த நிலையம் பெர்சியாரான் பூச்சோங் பெர்டானாவில் (Persiaran Puchong Perdana) அமைந்துள்ளது. பூச்சோங் பெர்மாய் (Puchong Permai) நகர்ப் பகுதியுடன் இணைக்கும் சுற்றுப் பாதையுடன் இணைக்கப்பட்டு உள்ள இந்த நிலையம், பூச்சோங் பெர்டானா வளாகத்திற்கு (Kompleks Puchong Perdana) அருகில் அமைந்துள்ளது.
பூச்சோங் பெர்டானா (Puchong Perdana) மற்றும் பூச்சோங் இண்டா (Puchong Indah) குடியிருப்புகளுக்கு, இந்த நிலையம் முதனமையாகச் சேவை செய்கிறது.
Remove ads
பேருந்து சேவைகள்
உதவி பேருந்துகள்
வேறு பேருந்துகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads