பூந்தி சமஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

பூந்தி சமஸ்தானம்
Remove ads

பூந்தி சமஸ்தானம் பூந்தி இராச்சியம் (Bundi State) இந்தியாவின் கிழக்கில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் பழைய பூந்தி மாவட்டத்தின் நிலப்பரப்பளவைக் கொண்டது. இந்த இராச்சியத்தை ஹட இராசபுத்திரர் குலம் ஆட்சி செய்தது.[1] இதன் தலைநகரமாக பூந்தி நகரம் இருந்தது. பூந்தி இராச்சியத்தின் பரப்ப்ப்ளவு 5,750 சதுர மைல் ஆகும். இதன் மக்கள் தொகை 2,16,722 ஆகும். 1947=இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பூந்தி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் பான்ஸ்வாரா சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது

விரைவான உண்மைகள் Bundi Stateबूँदी रियासत, சமயம் ...
Thumb
பூந்தி இராச்சியத்தின் கார் அரண்மனை
Thumb
பூந்தி இராச்சியத்தின் கார் அரண்மனையின் சித்திரசாலை
Thumb
யாணை மீது பயணிக்கும் பூந்தி மகாராஜா பாவோ சிங், 1675
Thumb
பூந்தி மகாராஜா உமேத் சிங்
Remove ads

வரலாறு

Thumb
சுக் நிவாஸ் அரண்மனை, ஆண்டு 1900

மத்தியகாலம்

கிபி 1242-இல் பூந்தி பகுதியை ஜெய்த்திய மீனா இன குலத்தினர் ஆண்டு வந்தனர். இதனை 1342-இல் இராவ் தேவன் என்ற சௌகான் இராஜபுத்திர குலத் தலைவர் கைப்பற்றி ஆண்டார். 1632-இல் ராவ் இராஜா சத்தர் சல் பூந்தி இராச்சிய மன்னரானார். இவர் அவுரங்கசீப் படைகளுடன் வீரமாக போரிட்டு இறந்தார்.[2][3] சத்தர் சல் சிங்கின் மகன் இராவ் பாவோ சிங் (1658–1678) பூந்தி இராச்சிய மன்னரானார். 1707-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா, பூந்தி இராச்சிய மன்னர் பூத் சிங்கிற்கு மகாராஜா எனும் பட்டம் வழங்கினார்.[4]

பிரித்தானிய இந்தியா

1804-இல் மராத்தியப் பேரரசின் கீழ் இருந்த ஓல்கர்களுக்கு எதிராக படையெடுத்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாக பூந்தி மன்னர் இராஜா பிஷண் சிங் (1773–1821) படையுதவி செய்தார். 1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பான்ஸ்வாரா இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [5][6][7] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

Remove ads

இந்தியாவுடன் இணைத்தல்

1947=இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பூந்தி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் பான்ஸ்வாரா சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[8]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads