பெட்டாலிங் ஜெயா பழைய நகரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் (மலாய்: Bandar Lama Petaling Jaya; ஆங்கிலம்: Old Town Petaling Jaya) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பெட்டாலிங் ஜெயா நகர்ப் பகுதியில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் கீழ் உள்ள ஒரு புறநகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் பெட்டாலிங் ஜெயாபழைய நகரம், நாடு ...

1950-களில், இந்த நகர்ப்பகுதி ஒரு மீள்குடியேற்றப் பகுதியாக இருந்தது. பெட்டாலிங் ஜெயா நகரின் மத்திய வணிக மாவட்டத்தில் இருந்து தெற்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

Remove ads

பொது

பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் புதிய பந்தாய் விரைவு சாலைக்கு (New Pantai Expressway) நேர் வடக்கே உள்ளது. இந்த விரைவு சாலை சுபாங் ஜெயா நகரையும் கோலாலம்பூர் மாநகரையும் இணைக்கும் ஒரு பெரிய நெடுஞ்சாலை ஆகும்.

பெட்டாலிங் ஜெயா பழைய நகரத்தின் மேற்கில் PJS51 தொழில்துறை பகுதி; வடக்கில் செக்சன் 6 மற்றும் செக்சன் 7; கிழக்கில் செக்சன் 1A மற்றும் செக்சன் 5; தெற்கில் தாமான் மேடான் (Taman Medan) மற்றும் தாமான் பெட்டாலிங் உத்தாமா (Taman Petaling Utama) உள் புறநகர்ப் பகுதிகள் உள்ளன.

Remove ads

பிரிவுகள்

பெட்டாலிங் ஜெயா மாநகரம் எண்கள் இடப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. செக்சன் (Section) என்றும் அழைக்கப்படுகிறது.[1]

  • S என்றால் கிழக்கு பெட்டாலிங் ஜெயா (Section)
  • SS என்றால் மத்திய மற்றும் மேற்கு பெட்டாலிங் ஜெயா (Sungai Way - Subang)
  • PJU என்றால் வடக்கு பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya Utara) (PJ North)
  • PJS என்றால் தெற்கு பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya Selatan) (PJ South)

வரலாறு

இரண்டாம் உலகப் போரின் போது, மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அந்த ஆக்கிரமிப்பினால் மக்கள் பட்டினியால் அவதியுற்றனர். மற்றும் ஜப்பானியரின் அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க, கோலாலம்பூர் நகர்ப்புற மக்களில் பலர் கிராமப் புறங்களுக்குத் தப்பிச் சென்றனர்.

போருக்குப் பிறகு, இந்த மக்கள் ஆயிரக் கணக்கில் கோலாலம்பூருக்கு மீண்டும் திரும்பி வந்தனர். கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். ஆயிரக் கணக்கான குடிசைவாசிகளின் குடியேற்றத்தால் கோலாலம்பூரில் நிறைய சேரிகள் உருவாகின.[2][3]

கோலாலம்பூர் மக்கள் தொகை

அந்தக் காலக் கட்டத்தில் நாடு முழுவதும் அத்தகைய பிரச்சினைகள் இருந்தன. இருந்தாலும், கோலாலம்பூரில் பொருத்தமான நிலம் இல்லாததால், அதிகாரிகள் பெரும் சவால்களை எதிர்கொண்டனர். 1936-இல் 120,000 ஆக இருந்த கோலாலம்பூர் மக்கள் தொகை 1955-இல் 300,000 ஆக உயர்ந்தது.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க, கோலாலம்பூர் அரசாங்க அதிகாரிகள், தலைநகருக்கு மேற்கே ஒரு புதிய நகரத்தை உருவாக்க ஓர் இடத்தைத் தேர்வு செய்தனர். கிள்ளான் பழைய சாலைப் பகுதியில் (Old Klang Road) இருந்த எப்பிங்காம் ரப்பர் தோட்டத்தில் (Effingham Estate) 1,200 ஏக்கர் (486 எக்டர்) பரப்பளவில், அந்த இடம் உருவாக்கப்பட்டது உருவாக்கப்பட்டது.[4]

1950-களில் உருவாகப்பட்ட அந்த இடம் தான் இப்போது பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரம் தான், பெட்டாலிங் ஜெயாவிலேயே மிகப் பழமையான குடியிருப்பு பகுதியாகும். தற்சமயம் பெட்டாலிங் ஜெயா நகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.[5]

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads