பெரம்பூர் மேம்பாலப் பூங்கா
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் உள்ள ஒரு பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா[1] அல்லது முரசொலி மாறன் பூங்கா[2] (Perambur Flyover Park) இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதற்காக பெரம்பூர் மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னையின் இம்மேம்பாலத்திற்கு கீழே அமைந்துள்ளது. கூடிய திறந்த வெளி உடற்பயிற்சி நிலையம், அனைவரும் பயன்பெறும் வகையில், தரைஓடுகள் பதித்த நீண்ட வட்ட வடிவிலான நடைபாதை, நீரூற்றுகள், இயற்கைப் புல்வெளிகள், அலங்கார விளக்குகள், சாய்வு இருக்கைகள், மிக உயரமான பன்முக விளக்குக் கம்பம், மனதிற்கு இதமளிக்கும் பூக்கள் மலர்ந்த செடிகள் மற்றும் மரங்கள் என பல சிறப்பம்சங்கள் கூடிய இப்பூங்கா, பெரம்பூர் தொடருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு.
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை நடனம், தெருக்கூத்து[3] போன்ற 40 கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[4] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[5] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[6] பெரம்பூர் மேம்பாலப் பூங்காவும் ஒன்று.[7]
Remove ads
அமைவிடம்
பெரம்பூர் மேம்பாலப் பூங்கா பெரம்பூர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பெரம்பூர் நெடுஞ்சாலை, மாதவரம் சாலை, காகித ஆலை சாலை, ஆகியவை சந்திக்கும் இடத்தில், முரசொலி மாறன் பூங்கா (வடக்கு)[8] மற்றும் முரசொலி மாறன் பூங்கா (தெற்கு) என இரு பூங்காக்களாக, இடையில் இருப்புப்பாதை வழித்தடத்தைக் கொண்டுள்ளதாக, சிறப்பாக அமைந்திருக்கிறது. இதன் புவியியல் ஆள்கூறுகள்: 13°06'32.6"N, 80°14'33.2"E. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Remove ads
பலன் பெறும் சுற்றுப்புறங்கள்
இப்பூங்காவினால், பெரம்பூர், அயனாவரம், செம்பியம், வியாசர்பாடி, பெரவள்ளூர், அகரம், ஜவஹர் நகர், பெரியார் நகர், திரு. வி. க. நகர், கொளத்தூர் (சென்னை), மூலக்கடை, பொன்னியம்மன்மேடு, குமரன் நகர், பாலகுமாரன் நகர், திருப்பதி நகர், பூம்புகார் நகர், பாலாஜி நகர், அயனாவரம், ஜமாலியா, இலட்சுமிபுரம், விநாயகபுரம் ஆகிய பகுதிவாழ் குடும்பங்கள் பொழுதுபோக்கி, மனமகிழ்கின்றனர்.
சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதானம்
இப்பூங்காவின் உள்நுழைவு வாயிலுக்கு அருகில், பூங்காவின் உள்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் உருளைச் சக்கர விளையாட்டு மைதானத்தில் சிறுவர் மற்றும் சிறுமியர் ஆர்வத்துடன் பயிற்சி பெறும் காட்சிகள், மென்மேலும் அதிக அளவில் பயிற்சி பெற சிறுவர் சிறுமியர் சேர்வது குறித்து பெற்றோர்கள் முடிவு செய்ய ஏதுவாக உள்ளன.
போக்குவரத்து
பேருந்து போக்குவரத்து
சாலை வழியாக, இப்பூங்கா மற்ற ஊர்களுக்கு எளிதாக வந்து செல்லும் பொருட்டு அமைந்துள்ளது. இப்பூங்காவை ஒட்டிச் செல்லும் காகித ஆலை சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை (வடக்கு), பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு), மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் முரசொலி மாறன் மேம்பாலம் ஆகிய சாலைகள் பேருந்து சேவைகளையும் எளிதில் பெறும் பொருட்டு அமைந்துள்ளன.
தொடருந்து போக்குவரத்து
மிக அருகில் அமைந்துள்ள பெரம்பூர் தொடருந்து நிலையம் மற்றும் பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம், இப்பூங்காவிற்கு தொலைவிலிருந்து வரும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
Remove ads
அருகிலுள்ள இடங்கள்
- இசுபெக்ட்ரம் பேரங்காடி (சென்னை)
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

