பெர்தானா தாவரவியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்தானா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Perdana; ஆங்கிலம்: Perdana Botanical Gardens; சீனம்: 湖滨公园) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். மலேசியாவின் முதல் பெரிய அளவிலான பொழுதுபோக்குப் பூங்கா எனவும் அறியப் படுகிறது.
இந்தப் பூங்கா பொதுவாக பெர்தானா ஏரி பூங்கா (Perdana Lake Gardens); அல்லது ஏரிப் பூங்கா (Lake Gardens); மற்றும் பொது பூங்கா (Public Gardens) எனவும் அழைக்கப் படுகிறது. இதன் பரப்பளவு 91.6 ஹெக்டர் ஆகும். இது நகரின் மையத்தில், 1888 இல் நிறுவப்பட்டது.[1]
குடியேற்றக் காலத்தின் போது கோலாலம்பூர் நகரத்தின் சுவாரசியமான மற்றும் பொழுதுபோக்குப் புகலிடமாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பெரிய அளவிலான செதுக்கப்பட்ட மரங்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Remove ads
வரலாறு

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தப் புகழ்பெற்ற காலனித்துவ காலத்துப் பூங்கா, ஆல்பிரட் வென்னிங் (Alfred Venning) எனும், பிரித்தானிய சிலாங்கூர் மாநிலப் பொருளாளர் சிந்தனையில் உதித்ததாகும். 1888-ஆம் ஆண்டில், வெனிங் ஒரு தாவரவியல் பூங்கா சுங்கை பிராஸ் பிராஸ் (Sungei Bras Bras) பள்ளத்தாக்கில் கட்டப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அந்தத் திட்டத்திற்குப் பிரித்தானிய குடியுரிமை அமைச்சர் பிராங்க் சுவெட்டன்காம் (Frank Swettenham) உடன்பட்டார். மற்றும் பூங்கா அமைப்பதற்கு அரசு நிதியில் இருந்து ஒரு சிறு மானியம் வழங்கினார்.
பொதுமக்களின் ஆதரவு
ஆல்பிரட் வென்னிங் மூலமாக இந்தப் பூங்காவிற்கு 173 ஏக்கர்கள் (700,000 m2) பரப்பளவில் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், "பரிசோதனைப் பொருளாதாரத் தோட்டம்" ஒன்றும் அடங்கும். அந்த நிலத்தில் உள்ள புதர்க் காடுகள் மற்றும் லாலாங் வகைப் புற்கள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதிகளில் அலங்காரமாகப் பூக்கும் மரங்கள் மற்றும் சிறு செடிகள் நடப்பட்டன.
இந்தத் திட்டம் பொதுமக்களின் ஆதரவை, குறிப்பாக சீன கான்டோனிஸ் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், கான்டோனிஸ் சமூகத்தின் முன்னணி நபரான டோகே சோவ் ஆ எவோக் 1888-ஆம் ஆண்டில் ஆரம்ப நடவு திட்டத்திற்கு நூறு செம்பா மற்றும் ஆரஞ்சு மரங்களை வழங்கினார்.
சுவெட்டென்காம் மனைவியால் சிட்னி ஏரி என்று பெயரிடப்பட்ட ஒரு செயற்கை ஏரி சுங்கை பிராஸ் பிராஸ் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி இப்பொழுது பெர்டானா ஏரி என்று அழைக்கப் படுகிறது. இந்தத் திட்டம் முடிவு அடைவதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆனது.
சமூக அரங்கில் ஐரோப்பியர்களின் மேலாதிக்கம்
ஆனால் இப் பூங்கா வேலை தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பின்னர் முறையாக மே 13, 1889 அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்றங்களின் ஆளுனர் சர் செசல் கிளெமென்டி ஸ்மித் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.[2]


தற்போது கார்சோசா செரி நெகரா என அழைக்கப்படும் பிரித்தானிய அரசாங்கப் பிரதிநிதியான ஃபிராங்க் ஸ்வெட்டன்ஹாமின், அலுவலக இல்லமானது, இங்குள்ள ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது.
மேலும், ஆல்பிரட் வென்னிங், 1890 ஆம் ஆண்டில், ஏரி சங்கம் என்கிற பெயரில் ஒரு (இப்போது ராயல் லேக் கிளப் என்று அழைக்கப்படுகிறது) சமூக சங்கத்தை உருவாக்கினார். இது, சிலாங்கூர் சங்கத்தைப் போல் அல்லாமல், ஐரோப்பியர்களுக்கு என்றே ஏற்படுத்தப்பட்ட சங்கமாக இருந்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலாலம்பூரில் ஐரோப்பியர்கள் சமூக அரங்கில் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு தனித்த ஐரோப்பிய சங்கமாக இது விளங்கியது.[3][4] 1963 ல் கட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றம் இப் பூங்காவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது.[5]
பெயரிடுதல்
பூங்கா ஆரம்பத்தில் பொதுப் பூங்கா என்று அழைக்கப்பட்டது, ஆனால் பின்னர் ஏரிப் பூங்கா என மறுபெயரிடப்பட்டது. 1975 ஆம் ஆண்டில், தன் அப்துல் ரசாக் என்பவரால் தாமன் தாசிக் பெர்டானா அல்லது பெர்டானா ஏரிப் பூங்கா என மறுபெயரிடப்பட்டது. பூங்காவை ஒரு தாவரத் தோட்டமாக மாற்றும் முதல் கட்டத்தில், ஜூன் 28, 2011 அன்று டாட்டா 'ஸ்ரீ நஜீப் ரசாக் என்பவரால் 'பெர்டானா தாவரவியல் பூங்கா' என்று மீண்டும் பெயர் மாற்றப்பட்டது.[6]
Remove ads
இருப்பிடம்
இப் பூங்கா, ஜாலான் பெர்டானா அல்லது வென்னிங் சாலையின் வழியில் அமைந்துள்ளது. இது மலேசியாவின் தேசிய அருங்காட்சியகம் அருகே அமைந்துள்ளது. இதற்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ள பொதுப் போக்குவரத்து மையம் கோலாலம்பூர் சென்ட்ரல் ரயில் நிலையமாகும்.
இதற்கு செல்லும் மற்றொரு வழியானது, பாசிர் சென்டி எல் ஆர் டி நிலையத்திலிருந்து ரேபிட் கேஎல் நிறுத்தத்தை அடைய பேருந்து B112 வேண்டும். இந்த நிறுத்தமானது பூங்காவின் இறுதியில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தைக் குறிக்கும்.
பூங்காவில், "டிராம்" வண்டிகள்[7] தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கிடைக்கின்றன. பார்வையாளர்கள் 30 நிமிடங்களுக்கான மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். வழிகாட்டுநர் உதவியுடன் கூடிய நடைப்பயிற்சி[8] ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை வழங்கப்படுகிறது.
Remove ads
பார்க்கவேண்டிய இடங்கள்
இங்கே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில், தேசிய நினைவுச்சின்னம், மான் பூங்கா, செம்பருத்தி தோட்டங்கள், ஆர்க்கிட் தோட்டம், கோலாலம்பூர் பறவை பூங்கா மற்றும் கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்கா போன்றவை பார்க்க வேண்டிய இடங்களாகும். பறவைகள் பூங்கா 1991 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இப் பூங்கா 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்களைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மூடப்பட்ட பறவைப் பூங்காவாக உள்ளது.[9]
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads