பசார் செனி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பசார் செனி நிலையம்
Remove ads

பசார் செனி நிலையம் அல்லது பசார் செனி எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pasar Seni station அல்லது Pasar Seni LRT station மலாய்: Stesen Pasar Seni அல்லது LRT Pasar Seni சீனம்: 中央艺术坊站) என்பது கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த விரைவு போக்குவரத்து நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் KJ14 KG16 பசார் செனி, பொது தகவல்கள் ...

பசார் செனி என்பது முன்பு கோலாலம்பூர் மத்திய சந்தை (Central Market) என்று அழைக்கப்பட்டது. பெட்டாலிங் சாலைக்கு (Petaling Street) மிக அருகில் இந்த நிலையம் உள்ளது. 1985-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மத்திய சந்தை புனரமைப்பு செய்யப்பட்டு பசார் செனி எனும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையமாக மாற்றப் பட்டது.

இதே இடத்தில் தான் பசார் செனி எல்ஆர்டி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை கிளானா ஜெயா வழித்தடம் (Kelana Jaya Line); காஜாங் வழித்தடம் (Kajang Line) ஆகிய இரு தடங்கள் இணைக்கின்றன.[3]

Remove ads

பொது

கிளானா ஜெயா வழித்தடம் வழியாக செப்டம்பர் 1, 1998-இல் சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையத்திற்கும் பசார் செனி நிலையத்திற்கும் இடையே சேவை தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1999-இல் பசார் செனி நிலையத்திலிருந்து புத்ரா முனையத்திற்கு விரிவாக்கப்பட்டது. புத்ரா முனையம் தற்போது கோம்பாக் எல்ஆர்டி நிலையம் என அறியப்படுகின்றது.

இந்த தொடருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் தொடருந்து நிலையம் 400 மீட்டர் தொலைவில் நடைத் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் முதன்மையான பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads