பெலாகா வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெலாகா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BLG[2], ஐசிஏஓ: WBGC); (ஆங்கிலம்: Belaga Airport; மலாய்: Lapangan Terbang Belaga) என்பது மலேசியா, சரவாக், காப்பிட் பிரிவு; பெலாகா மாவட்டம், பெலாகா நகரத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[3]
கிழக்கு மலேசியாவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையத்தில் இருந்து தற்போது எந்த வணிக விமானங்களும் பறக்கவில்லை. கடந்த காலத்தில் பிளைஏசியன் எக்சுபிரசு (FlyAsianExpress) நிறுவனத்தின் மூலமாக பிந்துலு நகரத்திற்கும் பெலாகா நகரத்திற்கும் பயணச் சேவைகள் இருந்தன. அதன் பின்னர், மாஸ் விங்ஸ் (MASwings) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அந்தச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்த வானூர்தி நிலையம் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Holdings Berhad) மூலம் இயக்கப் படுகிறது. இந்த நிலையம் ஒரே ஒரு ஓடுபாதையை மட்டுமே கொண்டுள்ளது; மற்றும் 200 அடி உயரத்தில் உள்ளது.
Remove ads
பொது
பெலாகா நகரம்
பெலாகா நகரம் காப்பிட் நகரில் இருந்து வடகிழக்கே 120 கி.மீ. தொலைவில் ராஜாங் ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் தென்சீனக் கடல்கரை நகரமான பிந்துலு நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.
1900-களின் முற்பகுதியில் பெலாகா கிராமம் நிறுவப்பட்டது. அப்போது ஒரு சில சீன வர்த்தகர்கள் பெலாகாவில் கடைகளை அமைத்தனர். மண்ணெண்ணெய், உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை அங்குள்ள ஒராங் உலு மக்களுக்கு வழங்கினர். பண்டமாற்று வர்த்தகம் நடந்துள்ளது.
பிந்துலு - பக்குன் நெடுஞ்சாலை
பாலுய் மற்றும் பெலாகா ஆறுகளின் கரைகளில் பல கென்யா (Kenyah); காயான் (Kayan) நீண்ட வீடுகள் உள்ளன. ராஜாங் ஆற்றுக் கரைகளில் புனான், செகாப்பான், கெசாமான், தஞ்சோங் பூர்வீக பழங்குடியினரின் நீண்ட வீடுகள் உள்ளன.
பெலாகா மாவட்டம்; காப்பிட் நகருடன் படகு மூலம் இணைக்கப் பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துச் சாலைகள் மிகவும் குறைவு. இருப்பினும் அண்மையில் பிந்துலு - பக்குன் நெடுஞ்சாலை (Bintulu-Bakun Highway) உருவாக்கப்பட்டது. ஆனாலும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads