மகாராஜாலேலா நிலையம்

கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia

மகாராஜாலேலா நிலையம்map
Remove ads

மகாராஜாலேலா நிலையம் (ஆங்கிலம்: Maharajalela Station; மலாய்: Stesen Maharajalela; சீனம்: 马哈拉惹雷拉站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மகாராஜாலேலா சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.[1]

விரைவான உண்மைகள் MR3 மகாராஜாலேலா நிலையம், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]

Remove ads

பொது

மகாராஜாலேலா சாலையின் பெயரால் மகாராஜாலேலா நிலையம் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மெர்டேக்கா அரங்கத்தில் இருந்து தென்மேற்கே, மகாராஜாலேலா சாலையின் மீது கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையம், பெட்டாலிங் சாலையில் இருந்து தெற்கே சில நூறு மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 4 செரி பெட்டாலிங் வழித்தடம்; 5 கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ள சில நிலையங்கள் இந்த நிலையத்திற்கு அருகிலேயே உள்ளன.

இம்பி சாலை மற்றும் சுல்தான் சுலைமான் சாலை ஆகிய சாலைகள் இந்த நிலையத்தின் பாதையில்தான் உள்ளன. முன்னர் இந்த நிலையம், மெர்டேக்கா மோனோரெயில் நிலையம் (Merdeka Monorail Station) என்று அழைக்கப்பட்டது.[3]

Remove ads

நிலைய தள அமைப்பு

L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை மகாராஜாலேலா சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C
Remove ads

நுழைவாயில்கள்

இந்த நிலையத்தில் மூன்று வெளியேறு வழிகள் உள்ளன. அவற்றில் இரண்டு வழிகள்; வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மகாராஜாலேலா சாலையின் இருபுறமும் செல்கின்றன. மேலும் ஒரு வழி; நிலையத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மெர்டேக்கா அரங்கத்தின் கார் நிறுத்துமிடத்திற்குச் செல்கிறது.

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இலக்கு ...

காட்சியகம்

மகாராஜாலேலா நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads