மக்னீசியம் நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்னீசியம் நைட்ரேட்டு (Magnesium nitrate) என்பது Mg(NO3)2(H2O)x என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இங்குள்ள x = 6, 2, மற்றும் 0 என்ற எண்களால் பிரதியிடப்படுகிறது. இவை அனைத்துமே திண்மங்களாகும். நீரிலி வடிவ மக்னீசியம் நைட்ரேட்டு ஒரு நீருருறிஞ்சும் வேதிப்பொருளாகும். காற்றில் படும்போதே இது அறுநீரேற்றாக மாறும் தன்மை கொண்டது. மக்னீசியம் நைட்ரேட்டு உப்புகள் அனைத்தும் தண்ணீரிலும் எத்தனாலிலும் கரைகின்றன.
Remove ads
தோற்றம்
தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய சேர்மமாக இருப்பதால் இது சுரங்கங்களிலும், குகைகளிலும் அறு நீரேற்று வடிவ நைட்ரோமேக்னசைட்டு என்ற கனிம வடிவிலேயே தோன்றுகிறது [1].
தயாரிப்பு
வணிகமுறையில் பயன்படும் மக்னீசியம் நைட்ரேட்டை நைட்ரிக் அமிலத்தை மக்னீசியம் உப்புகளுடன் சேர்த்து தயாரிக்கிறார்கள்.

பயன்கள்
அடர் நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் போது நீர்நீக்க முகவராக மக்னீசியம் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது [3]. 10.5% நைட்ரசன் மற்றும் 9.4% மக்னீசியம் தனிமங்கள் சேர்ந்து உரங்களாக தயாரிக்கப்படுகின்றன. எனவே இவ்வுரத்தின் தரம் 10.5-0-0 + 9.4% Mg.எனப்படுகிறது. மக்னீசியம் நைட்ரேட்டு உரக் கலவைகளில் பொதுவாக அமோனியம் நைட்ரேட்டு, கால்சியம் நைட்ரேட்டு, பொட்டாசியம் நைட்ரேட்டு மற்றும் நுண் சத்துப் பொருள்கள் போன்றவை கலந்திருக்கும். இக்கலவை பைங்குடில் மற்றும் மண்ணில்லா வேளாண்மை வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது.
வினைகள்
கார உலோக ஐதராக்சைடுடன் மக்னீசியம் நைட்ரேட்டு வினை புரிந்து தொடர்புடைய நைட்ரேட்டு உருவாகிறது.
- Mg(NO3)2 + 2 NaOH → Mg(OH)2 + 2 NaNO3..
தண்ணீருடன் அதிக நாட்டத்தை மக்னீசியம் நைட்ரேட்டு பெற்றிருப்பதால், அறுநீரேற்றை சூடுபடுத்துவதால் உப்பில் நீர் நீக்கம் நிகழ்வதில்லை. மாறாக மக்னீசியம் ஆக்சைடு, ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் ஆக்சைடுகளாக சிதைவடைதல் நிகழ்கிறது.
- 2 Mg(NO3)2 → 2 MgO + 4 NO2 + O2..
தண்ணீருடன் கலந்துள்ள நைட்ரசன் ஆக்சைடுகளை ஈர்த்துக் கொள்ளுதல் நைட்ரிக் அமிலத்தை தயரிப்பதற்கான ஒரு வழி முறையாகும். இம்முறை திறனுள்ள வினையாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும் வலிமையான அமிலங்கள் எதுவும் இம்முறைக்கு அத்தியாவசியமில்லை. சில சந்தர்ப்பங்களில் நீரகற்றியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads