மஞ்சுளா விஜயகுமார்
இந்தியத் திரைப்பட நடிகை (1953-2013) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சுளா விஜயகுமார் (9 செப்டம்பர் 1953 - 23 சூலை 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.[1]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
மஞ்சுளாதேவி என்ற இயற்பெயருடன் பிறந்து, "மஞ்சுளா" என்று திரையுலகிற்காக தன் பெயரை சுருக்கமாக மாற்றி கொண்டார். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பனீ ராவ்–கௌசல்யா தம்பதியருக்கு ஒரு வைணவ வைதீக குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தார். மஞ்சுளாவுடன் மூத்த சகோதரியான சியமளா மற்றும் நாகேந்திரகுமார் என்கிற பாபு, சிட்டி, ரவீந்திரகுமார் என மூன்று தம்பிகள் உள்ளனர். மஞ்சுளாவின் தந்தையார் பனீ ராவ் அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர் இரயில்வேத் துறையில் மேல் அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்த போது தான் அவர்கள் குடும்பம் பணியிடை மாற்றம் காரணமாக தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அங்கு தான் மஞ்சுளா மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றலைப் பெற்றார். அவரது பள்ளிக் காலத்தில் ஒரு முறை மாணவர் திறன் போட்டியில் மஞ்சுளா ஆங்கிலப் புலமை பேச்சாற்றாலை ஒரு முறை திரைப்பட கதாசிரியர் சித்ராலயா கோபு பார்த்துவிட்டு அப்போது அவர் கதை வசனம் எழுதிய சாந்தி நிலையம் திரைப்படத்தில் அவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் அந்த திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
Remove ads
நடிப்பு
மஞ்சுளா 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு தமிழ்த் திரையுலகில் 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் தமிழ்த் திரையில் அன்றைய முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகுமார் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மஞ்சுளா 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார்.[2][3] எம்.ஜி.ஆர் உடன் ரிக்சாக்காரன் (1971), இதய வீணை (1972), உலகம் சுற்றும் வாலிபன் (1973), நேற்று இன்று நாளை (1974), நினைத்ததை முடிப்பவன் (1975) என மொத்தம் ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளார். சிவாஜி கணேசன் உடன் எங்கள் தங்க ராஜா (1973), என் மகன் (1974), அவன்தான் மனிதன் (1975), மன்னவன் வந்தானடி (1975), அன்பே ஆருயிரே (1975), டாக்டர் சிவா (1975), சத்யம் (1976), உத்தமன் (1976), அவன் ஒரு சரித்திரம் (1977), நெஞ்சங்கள் (1982) எனப் பத்துப் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
Remove ads
இறப்பு
2013 சூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads