மணீஷ் சிசோடியா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

மணீஷ் சிசோடியா
Remove ads

மணீஷ் சிசோடியா (Manish Sisodia) (பிறப்பு: 2 பிப்ரவரி 1972) இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சியில் அரசியல்வாதி ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் மணீஷ் சிசோடியாவும் ஒருவர் ஆவார். இவர் 2015-ஆம் ஆண்டு முதல தில்லி மாநில துணை முதலமைச்சராக உள்ளார். மணீஷ் சிசோடியா மூன்றாவது முறையாக பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்ற உறுப்பின்ராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இவர் நிதி, கல்வி, தொழிற்கல்வி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை மற்றும் கலால் துறை அமைச்சராக உள்ளார்.[2] [3] [4]மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மணீஷ் சிசோடியா 28 பிப்ரவரி 2023 அன்று அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

விரைவான உண்மைகள் மணீஷ் சிசோடியா, தில்லி மாநில துணை முதலமைச்சர் ...
Remove ads

குற்றச்சாட்டுகள்

சூன் 2022-இல் பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டுமானத்தில் ஊழல் புரிந்ததாக மணிஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். இக்குற்றச்சாட்டுகக்ள் மீது தில்லி லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.[5]

சூலை 2022-இல் தில்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா, தில்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை 2021-22 குறித்தும், மதுபானங்களை விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது மற்றும் விற்பனை உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக தில்லி மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி பி ஐ-க்கு சோதனை மேற்கொண்டனர்.[6][7] [8][9]தில்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் மணீஷ் சிசோடியா முதலிடத்தில் உள்ளார்.இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி மற்றும் கணக்கு முறைகேடு உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக கவன ஈர்ப்பு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.[10]

27 பிப்ரவரி 2023 அன்று சிபிஐ-விசாரணைக்குச் சென்ற மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விகளுக்கு முறையாக பதில் தரவில்லை என சிபிஐ குற்றம்சாட்டி கைது செய்து செய்தனர். [11][12]

Remove ads

பதவி விலகல்

முறைகேடு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்திர குமார் ஜெயின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினர்.[13][14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads