மந்தின்
மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
மந்தின் என்பது (மலாய்: Mantin; ஆங்கிலம்: Mantin; சீனம்: 曼丁); மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். சிரம்பான் நகரில் இருந்து 17 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 41 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
மந்தின் நகரத்திற்கு செத்துல் (Setul) என்றும்; மந்தின் என்றும் என இரண்டு பெயர்கள் உள்ளன. செத்துல் என்பது ஒரு தாவரத்தின் பெயராகும்.[1]
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்தின் ஈயச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்ற இடமாகும். 1800-ஆம் ஆண்டுகளில் இங்கு நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்தன. கோங் சாங் (Kong Sang) எனும் பிரபல சீனத் தொழிலதிபருக்குச் சொந்தமாகப் பல ஈயச் சுரங்கங்கள் இருந்ததாகவும் அறியப் படுகிறது.[2]
Remove ads
வரலாறு
1860-ஆம் ஆண்டில் சிரம்பான், சுங்கை ஊஜோங் பகுதியில் கீ ஹின் - ஹாய் சான் இரகசியக் கும்பல்களுக்கு இடையில் பயங்கரமான சண்டை நடந்தது.
அதில் காப்பித்தான் செங் மிங் லீ (Kapitan Seng Ming Lee) என்பவர் கொல்லப் பட்டார். இவரின் சந்ததியினர் மந்தினுக்குத் தப்பிச் சென்றனர். அந்த நிகழ்ச்சியில் இருந்து மந்தின் வரலாற்றின் தொடக்கக் கால அறியப் படுகிறது. செங் மிங் லீயின் கொள்ளுப் பேரப் பிள்ளைகள் இன்னும் மந்தினில் வசிக்கின்றனர்.
போர்க் கால அகதிகளின் மறைவிடம்
மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் மந்தின் அமைந்து உள்ளது. அந்த வகையில் போர்க் கால அகதிகளுக்கும்; குற்றச் செயல் அகதிகளுக்கும் மிகவும் பிடித்தமான சரணாலயமாகவும், மறைவிடமாகவும் மந்தின் விளங்கி வருகிறது.
1943-ஆம் ஆண்டில் மலாயாவை ஜப்பானியர் ஆக்கிரமிப்பு செய்த போது, சீன ஹக்கா இனத்தவர் பெரிய அளவில் இங்கு குடியேறினர்.[3] மந்தின் புவியியல் அமைப்பிடம் ஒரு பள்ளத்தாக்கில் இருந்ததால், 1903-ஆம் ஆண்டு வரையில், முக்கிய போக்குவரத்துகளின் மூலமாக அணுக முடியாத இடமாக இருந்தது.
கோலாலம்பூர் சிரம்பான் இரயில் பாதை
1903-ஆம் ஆண்டில் தான் கோலாலம்பூரில் இருந்து சிரம்பானுக்கு ஓர் இரயில் பாதை போடப் பட்டது.[4] அந்த இரயில் பாதை பத்தாங் பெனார் நகரம் வழியாக செல்கிறது. அதன் வழி மந்தின் நகரத்தின் மேற்குப் பகுதிக்குச் செல்ல முடிந்தது.
அந்த நேரத்தில், பிரித்தானிய சுரங்க முதலாளிகள் பெருமளவிலான ஈயத் தூர்வாரிகளை மந்தினுக்குள் கொண்டு வந்தனர். அதன் விளைவாக ஈயச் சுரங்கத் தொழில் அந்த நகரத்திற்குப் பொருளாதார ஏற்றத்தையும் கொண்டு வந்தது.
Remove ads
மந்தின் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்=
மந்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 392 மாணவர்கள் பயில்கிறார்கள். 45 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads