மம்பாவ்
சிரம்பான் மாநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மம்பாவ் (மலாய்; ஆங்கிலம்: Mambau; சீனம்: 曼巴乌) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில்; சிரம்பான் மாநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரம். சிரம்பான் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
மம்பாவ் நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்க சிரம்பான் - போர்டிக்சன் தொடருந்து வழித்தடத்தின் போக்குவரத்து மையப் புள்ளியாக விளங்கியது. அந்த தொடருந்து வழித்தடம் மலேசியாவின் மிகப் பழைமையான தொடருந்து வழித்தடங்களில் ஒன்றாகும்.[2]
Remove ads
பொது
மாம்பாவ் நகரம் மலேசிய கூட்டரசு சாலை 53-இல் அமைந்துள்ளது, இந்தச் சாலை சிரம்பான் நகரத்தை போர்டிக்சன் சுற்றுலா நகரத்துடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். போர்டிக்சன் நகரம் மம்பாவ் நகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
அத்துடன் இந்த நகரம் லிங்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 15-ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கிய வணிகத் தளமாகவும், 18-ஆம் நூற்றாண்டில் ஈய வணிகத்திற்கான முக்கிய நிறுத்தமாகவும் பெயர் பெற்றது. தற்போது மாம்பாவ் நகரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் சீனர்கள் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads