மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம் (Mayong Central Museum and Emporium), பில்லி சூன்ய வித்தைகளின் நிலம் அல்லது கண்கட்டி வித்தையின் நிலம் என்று அழைக்கப்படுகிறது.[1] இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மரிகாவன் மாவட்டத்தில் மயோங் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில், குவகாத்தி நகரத்திலிருந்து சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. .இந்தியாவில் சூனியத்தின் தொட்டிலாகக் கருதப்பட்ட மயோங் என்னுமிடம் அதன் வரலாறு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகக் காணப்படுகிறது.[2]
Remove ads
சொற்பிறப்பு
இந்த பெயரின் சொல்லுக்கான தோற்றம் பல நிலைகளிலிருந்து ஆரம்பிக்கின்றது. சமஸ்கிருதச் சொல்லான மாயா (மாயை), சுட்டியா /திவா/தியோரி சொல்லான மா-யோங், (அம்மா என்ற பொருள்), திமாசா சொல்லான மியோங் (யானை என்ற பொருள்) அல்லது மா என்ற சொல்லைக் குறிக்கின்ற தாய் சக்தி மற்றும் ஓங்கோ சொல்லான பகுதி ஆகியவாறு அமைகின்றது. எனவே மொய்ராங் குலத்தைச் சேர்ந்த மணிப்பூரிகள் இந்த பகுதியில் வசிப்பதாக சிலர் நம்புகிறார்கள்; மொய்ராங் என்ற பெயர் காலப்போக்கில் மேஹோங் என்று மாற்றம் பெற்றது. [3]
Remove ads
தொன்மவியல்
மயோங் என்பதானது பிரக்ஜோதிஷ்புராவுடன் (அசாமின் பண்டைய பெயர்) இணைந்து மகாபாரதம் உட்பட பல புராண காவியங்களில் இடம் பெறுவதைக் காணமுடியும். கச்சாரி இராச்சியத்தின் [4] தலைமை பொறுப்பில் இருந்த கட்டோட்காச்சா தனது மந்திர சக்திகளுடன் மகாபாரதப் போரில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பில்லி சூனிய மந்திரிகள் மற்றும் மந்திரவாதிகள் மயோங் காட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் அங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மயோங் என்ற இடம் பில்லி சூனிய வித்தைகளின் நிலம் என்ற தலைப்பில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரையில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. மெல்லிய காற்றில் காணாமல் போகும் ஆண்கள், மக்கள் விலங்குகளாக மாற்றப்படுவது, அல்லது மிருகங்கள் மாயமாய் அடக்கப்படுவது போன்ற பல கதைகள் மயோங்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மயோங் பகுதியில் சூனியம் மற்றும் மந்திரம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்ததாகவும், அவை தலைமுறை வழியாக தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது இன்று (6 ஏப்ரல் 2019 இரவு 10:15 மணிக்கு) ஜீ செய்திகளில் காட்டப்பட்டது. நிருபர் சோஹைல் என்பவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிராமவாசிகள் செய்த சில உண்மையான மந்திர வித்தைகளையும் அவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
Remove ads
வரலாறு
நவீன காலத்தின் தொடக்கம் வரை சக்தி வழிபாட்டின் கூறாக நரபலி அல்லது மனித தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டன. அகழ்வாய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் சமீபத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் மனித தியாகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கருவிகளைப் போன்ற வாள்களையும் பிற கூர்மையான ஆயுதங்களையும் தோண்டி எடுத்தள்ளனர். மயோங்கில் அஹோம் காலத்தில் மனித தியாகம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. [2]
சுற்றுலா
மயோங் ஒரு சுற்றுலா மற்றும் தொல்பொருள் இடமாக அமைந்துள்ளது. ஏனெனில் அதன் வளமான வனவிலங்குகள், தொல்பொருள் யாத்திரை, சூழல் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா மற்றும் நதி சுற்றுலா போன்றவை சுற்றுலாப் பயணிகளால் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
2002 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியத்தில் சூனியம் மற்றும் ஆயுர்வேதம் பற்றிய நுல்கள் காணப்படுகின்றன. மேலும், ஏராளமான தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. [5] மயோங்கிற்கு மிக அருகில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான ஒரு கொம்பு காண்டாமிருகத்தினை இந்த சரணாலயத்தில்காண முடியும்.
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads