மரிக்கொழுந்து (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரிக்கொழுந்து 1991 ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் மற்றும் ஐசுவரியா ஆகியோர் நடிப்பில், புதியவன் இயக்கத்தில், தேவா இசையில், பி. மகேந்திரன் மற்றும் டி. எம். என் கருணாநிதி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]
Remove ads
கதைச்சுருக்கம்
சீனுவும் (ரமேஷ் அரவிந்த்) அவரின் இளவயது மகள் சித்ராவும் (ஐசுவரியா 2) மரிக்கொழுந்துபட்டி எனும் கிராமத்திற்கு வருகின்றனர். அந்த கிராமத்தினர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு தருகின்றனர். சித்ராவிற்கு அவளின் தாய் மரிக்கொழுந்து (ஐசுவரியா) பற்றி அது வரை சொல்லாத ரகசியத்தைச் சொல்கிறார் சீனு.
மரிக்கொழுந்து தன் பாட்டியுடன் வசிக்கிறாள். அவள் நல்ல மனம் படைத்தவளாக இருந்தாலும், அவளின் உடல் நிறம் குறித்து தாழ்வுமனப்பான்மை கொண்டவளாக இருக்கிறாள். விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவள் விருப்பம். நகரத்தில் பாட்டியுடன் (மனோரமா) வசிக்கும் கல்லூரி மாணவன் சீனு விடுமுறையில் கிராமத்திலுள்ள தன் தந்தை (வினு சக்கரவர்த்தி) வீட்டுக்கு வருகிறான். அங்கு மரிக்கொழுந்திடம் அவன் நட்போடு பழகுகிறான். அதை காதலென நினைக்கும் மரிக்கொழுந்து அவனுடன் உறவு கொள்கிறாள். இது ஊரில் உள்ள மற்றவர்களுக்கு தெரியவர இருவரின் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் மரிக்கொழுந்தை திருமணம் செய்ய சீனுவிற்கு விருப்பமில்லை. எனவே அந்த திருமணத்தை நிறுத்துகிறான். அவன் உமாவை திருமணம் செய்ய விரும்புகிறான். அவன் தந்தை அவனுக்கு உமாவை மணம் செய்துவைக்க விரும்புகிறார். அனால் அவன் தாயோ மரிக்கொழுந்தையே அவன் மணம் செய்ய வேண்டும் என்கிறார். கர்ப்பிணியான மரிக்கொழுந்தின் பாட்டி இக்கவலையிலேயே இறக்கிறார்.
மரிக்கொழுந்து பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். சீனுவின் தந்தை அவளைக் குழந்தையுடன் ஊரைவிட்டுச் சென்றுவிடும்படி மன்றாடுகிறார். அவளும் ஊரைவிட்டுச் செல்ல முடிவுசெய்து அவள் போகிறவழியில், அந்த ஊரில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர் அவரது தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் பாதரசக்கழிவு அந்த ஊரிலுள்ள நீர்நிலையில் கலப்பதால் அந்த நீர் நஞ்சாக மாறிவிட்டதையும் அந்த நீரை குடிப்பவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள். அந்த நீரை யாரும் குடித்துவிடாமல் தடுக்கச் செல்கிறாள். அவள் கூறும் உண்மையை அந்தக்கிராமத்தினர் யாரும் நம்பாததால் தானே அந்த நீரைப் பருகுகிறாள். அந்த நீரின் நச்சுத்தன்மையால் அவள் உடல்நிலை பாதிப்படைகிறது. அவள் இறக்கும் முன் சீனு அவளுக்கு தாலி அணிவித்து மனைவியாக ஏற்றுக்கொள்கிறான்.
தன் தாயின் கதையைக் கேட்டு பெருமை கொள்ளும் சித்ரா கண்ணீர் சிந்துகிறாள்.
Remove ads
நடிகர்கள்
- ரமேஷ் அரவிந்த் - சீனு
- ஐசுவரியா - மரிக்கொழுந்து மற்றும் சித்ரா
- மனோரமா - சீனுவின் பாட்டி
- வினு சக்கரவர்த்தி - சீனுவின் தந்தை
- நாசர்
- கவுண்டமணி
- செந்தில்
- ராதாபாய் - மரிக்கொழுந்துவின் பாட்டி
- அஞ்சனா - உமா
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - கணக்குப்பிள்ளை
- பவானி - எழுத்து
- அல்வா வாசு - முனுசாமி
- ஜோக்கர் துளசி
- ஞானவேல் - நாட்டாமை
- வி. பி. ராஜன்
- பூர்ணிமா
- ஷோபனா
- சுப்ரஜா
- நவீனா
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வாலி மற்றும் காமகோடியன்.[5][6][7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads