மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்

From Wikipedia, the free encyclopedia

மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம்map
Remove ads

மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம் (மலாய்:Pusat Pakar Universiti Malaya; ஆங்கிலம்:Universiti Malaya Specialist Centre) (UMSC) என்பது மலேசியாகோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் ஆகும். மலேசியாவில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகளில் மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையமும் ஒன்றாக அறியப்படுகிறது.[2]

விரைவான உண்மைகள் மலேசிய அரசு, அமைவிடம் ...

பொதுத் துறையிலிருந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள், தனியார் மருத்துவத் துறைக்குப் புலம் பெயர்வதைத் தடுப்பதற்கான முயற்சியாக, 1998-ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் அதன் மருத்துவத் துறையினால் இந்த நிபுணத்துவ மையம் நிறுவப்பட்டது.

Remove ads

பொது

நாட்டின் முதன்மையான நிபுணத்துவ மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த மருத்துவ மையத்தில் 270-க்கும் மேற்பட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள்; பேராசிரியர்கள் உள்ளனர். சிக்கலான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளை நவீனத் தொழில்நுட்பத்தின் வழியாக தீர்வு காண்கின்றனர். இந்த நிபுணத்துவ மருத்துவமனையில் 40 சிகிச்சை அறைகள்; 99 படுக்கைகள்; மற்றும் நான்கு பல் மருத்துவ அறைகளும் உள்ளன.

1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மையம், தொடக்கத்தில் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (Universiti Malaya Medical Centre) அமைந்திருந்தது. 2007-ஆம் ஆண்டில் தன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் தான் மலேசியாவின் மிகப்பெரிய கற்பித்தல் மருத்துவமனை ஆகும்; மற்றும் மலேசியாவின் பழமையான மருத்துவப் பள்ளியாகவும் கருதப்படுகிறது.[3]

Remove ads

மேலும் காண்க

* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads