மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022

From Wikipedia, the free encyclopedia

மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022
Remove ads

மலேசிய அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2022 (Constitution of Malaysia (Amendment) Act 2022; மலாய்: Perlembagaan Persekutuan Malaysia (Pindaan) 2022; சீனம்: 2022 年马来西亚联邦宪法修正案); என்பது சபா, சரவாக் மாநிலங்களைத் தீபகற்ப மலேசியாவுடன் சமமான பங்காளிகளாக நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டத் திருத்தமாகும்.[1][2]

விரைவான உண்மைகள் சான்று, நிலப்பரப்பு எல்லை ...

இந்தச் சட்டம் 1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தத்தை (MA63) முறையாகச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தச் சட்டத் திருத்தம், 2021 திசம்பர் 14-ஆம் தேதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.[3]

பின்னர் 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி, மலேசிய மாமன்னரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.[4]

Remove ads

பொது

2019-ஆம் ஆண்டில், அப்போதைய பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம்; மலேசிய அரசியலமைப்பில் இதே போன்ற ஒரு திருத்தம் செய்யப் படுவதற்கு முன்மொழிவு செய்தது.

அந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால், சபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவின் தொகுதிப் பிரதேசங்கள் என வரையறுக்கும் 1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தப் பதிவுகளின் 1 (2)-ஆவது பிரிவைத் திருத்தம் செய்ததாக அமைந்து இருக்கும்.

சபா சரவாக் பிரச்சினைகள்

மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த முன்மொழிவை ஆதரித்தாலும், அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அந்தத் திருத்தம் (மசோதா) தோல்வி அடைந்தது.

பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 செப்டம்பர் 16-ஆம் தேதி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் தொடர்பான சபா சரவாக் பிரச்சினைகள்; ஒரு சிறப்பு மன்றத்தின் மூலமாகக் கவனிக்கப்படும் என அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மசோதா

அதன் பின்னர், சபா சரவாக் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அவற்றுக்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமை தாங்கினார். அந்தப் பேச்சுவார்த்தைகளில் சபா, சரவாக் முதலமைச்சர்கள் மற்றும் மலேசிய அமைச்சரவையைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து 2021 அக்டோபர் 19-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) மேக்சிமஸ் ஓங்கிலி (Maximus Ongkili) ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். 1963-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலேசிய ஒப்பந்தம் திருத்தம் செய்யப்படுவதற்கு சிறப்பு மன்றம் ஒப்புக் கொண்டால், மலேசிய அரசியலமைப்பின் 1(2) மற்றும் 160(2) சட்டப் பிரிவுகளின் திருத்தம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் அறிவித்தார்.

ஆழ்கடல் மீன்பிடி உரிமங்கள்

2021 அக்டோபர் 19-ஆம் தேதி நடந்த அதே கூட்டத்தில், சபா மற்றும் சரவாக் மாநில அரசாங்கங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமங்களை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்க சிறப்பு மன்றம் ஒப்புக்கொண்டது. இதற்கு முன்னர், ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்குவதற்கு புத்ராஜெயா மத்திய அரசு சரவாக் மாநில அரசிற்கு தடை விதித்து இருந்தது. [5]

இறுதியாக 2021 நவம்பர் 3-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்) வான் சுனைடி துவாங்கு ஜாபார் அவர்களால் அந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.[6] அந்தச் சட்டத் திருத்தங்கள் நான்கு மாற்றங்களைக் கொண்டிருந்தன:[7]

Remove ads

சட்டத் திருத்தங்கள்

  • சபா மற்றும் சரவாக் ஆகியவற்றை மலேசியாவின் "பிரதேசங்கள்" என்பதை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, பிரிவு 1(2) ஐ திருத்துதல்
  • மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 160-இல்; சபா மற்றும் சரவாக் மாநிலங்கள்; மலேசியக் கூட்டமைப்பில் இணைந்த நாளை மலேசியா தினம் என்பதை 160(2) சட்டத் துணைப் பிரிவாகச் சேர்த்தல்.
  • 160(2) துணைப் பிரிவில் உள்ள கூட்டமைப்பு என்பதன் வரையறையைத் திருத்தம் செய்தல்
  • சபா மற்றும் சரவாக்கின் பூர்வீகவாசிகளின் வரையறையை பிரிவு 161A-இல் திருத்தம் செய்தல்

சரவாக் பூர்வீக மக்கள்

  • சரவாக் பூர்வீக மக்கள் என்பவர்கள் யார் என்பதை மத்திய அரசாங்கத்தால் மட்டும் தீர்மானிக்கும் முந்தைய வரையறை பிரிவு 161A (7)-ஐ ரத்து செய்வது; அதுவே சட்டப்பிரிவு 161A-க்கான திருத்தங்களை உள்ளடக்கியது ஆகும். இந்தச் சட்டப் பிரிவின் திருத்தம் மூலமாக யாரை சரவாக் பூர்வீகமாகக் கருதலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம் என்பதை வரையறுக்கும் முடிவு, சரவாக் மாநில அரசாங்கத்திற்கு வழங்கப் படுகிறது.[7]

சரவாக் பூர்வீகம்

  • தயாக் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கழகம் இந்த திருத்தத்தை வரவேற்றது. இந்த நிகழ்வை "கனவு நனவானது" என்று வர்ணித்தது. இந்தச் சட்டத் திருத்தம், கலப்பு திருமணங்களின் மூலமாகப் பிறந்த குழந்தைகளைச் சரவாக் பூர்வீகம் என அனுமதிக்கும் உரிமையை சரவாக் மாநில அரசாங்கத்திற்கு வழங்குகிறது. மலேசிய அரசியலமைப்பின் பிரிவு 161A(7) இல்; பட்டியலில் சேர்க்கப்படாத சரவாக் பூர்வீக பழங்குடியினர் சரவாக் பூர்வீகமாக மாறுவதற்கும் இந்தச் சட்டத் திருத்தம் அனுமதி அளிக்கிறது.

கலப்புத் திருமணம் மூலமாக பிறந்த குழந்தைகளின் உரிமை

  • முன்பு "சரவாக் நிலச் சட்டத்தின் கீழ், பூர்வீகப் பெற்றோருக்கும்; அவரின் கலப்புத் திருமணம் மூலமாகப் பிறந்த குழந்தைக்கும் இடையே சொத்துடைமை மாற்றங்கள்; அல்லது பூர்வீக நிலங்களை மாற்றிக் கொடுத்தல் போன்றவை தடைசெய்யப்பட்டு இருந்தன. ஏனெனில் அந்தக் குழந்தை சட்டத்தின் கீழ் சரவாக் பூர்வீகமாகக் கருதப்படவில்லை.[8]

சட்டத் திருத்தம்

2021 டிசம்பர் 14-ஆம் தேதி, 6 மணிநேர விவாதத்திற்குப் பிறகு, மலேசிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம்; 199 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.[9] இந்தச் சட்டம் 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.[10]

2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றம் அதன் மாநில அரசியலமைப்பில் சில திருத்தங்களை நிறைவேற்றியது. சரவாக் முதலமைச்சர் எனும் மாநிலத்தின் அரசாங்கத் தலைவரின் பதவி; சரவாக் பிரதமர் என மாற்றம் செய்யப்பட்டது.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads