மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்சத்து அல்லது பிபிபீஏம் எனும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி; (மலாய்: Parti Pribumi Bersatu Malaysia (BERSATU அல்லது PPBM); ஆங்கிலம்: Malaysian United Indigenous Party; சீனம்:土著团结党; ஜாவி: ڤرتي ڤريبومي برساتو مليسيا ); என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக முகிதீன் யாசின் இருக்கிறார்.[7]
பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கம் சரிந்த பின்னர், பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி (Perikatan Nasional); மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியில் (Barisan Nasional) இது ஒரு முக்கியமான கட்சியாகும்.
Remove ads
பொது
14 ஜனவரி 2017-இல், சங்கப் பதிவாளரால் (Registrar of Societies), பெர்சத்து கட்சி அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மற்றும் பெர்சத்து சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசிய தேர்தல் ஆணையம் (Malaysian Election Commission) அங்கீகரித்தது.
மே 2020 முதல் ஆகஸ்டு 2021 வரை பிரதமர் பதவியையும், அமைச்சரவையில் பெரும்பான்மையான பதவிகளையும் கட்சி தக்க வைத்து இருந்தது.[8]
பூமிபுத்ரா உறுப்பினர்கள்
இந்தக் கட்சியின் நிறுவன உறுப்பினர்கள்; ஐக்கிய மலாய் தேசிய அமைப்பான (அம்னோ) மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியின் கிளர்ச்சிக் குழுவான காபுங்கான் கெத்துவா சாவாங்கான் (Gabungan Ketua Cawangan Malaysia) கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
பூமிபுத்ராக்கள் மட்டுமே இந்தக் கட்சியில் முழு உறுப்பினர்களாக முடியும். பூமிபுத்ரா அல்லாதவர்கள் கட்சியில் இணை உறுப்பினர்களாகச் சேரலாம். இருப்பினும் அவர்களுக்கு வாக்களிக்கவும் மற்றும் கட்சித் தேர்தல்களில் போட்டியிடவும் தகுதி இல்லை.[9]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads