மலேசிய செம்பனை வாரியம்

மலேசிய அரசு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

மலேசிய செம்பனை வாரியம்map
Remove ads

மலேசிய செம்பனை வாரியம் (மலாய்: Lembaga Minyak Sawit Malaysia; ஆங்கிலம்: Malaysian Palm Oil Board) (MPOB); என்பது மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Thumb
கிழக்கு மலேசியாவில் செம்பனைத் தோட்டம் 2010
Thumb
சபா, கூனாக் மாவட்டம், கூனாக் பகுதியில் செம்பனை நினைவுச்சின்னம், 2014

இந்த நிறுவனம் மலேசியாவில் செம்பனை தொழில்துறையின் நிலை உயர்வு மற்றும் தர உயர்வின் மேம்பாட்டிற்கு பொறுப்பான அரசு நிறுவனமாகச் செயல்படுகிறது.[1]

Remove ads

வரலாறு

1998-இல் மலேசிய செம்பனை வாரியச் சட்டம் (Malaysian Palm Oil Board Act) நிறைவேற்றப் பட்டதும்; மலேசிய செம்பனை வாரியம் (MPOB) நிறுவப்பட்டது. ஏற்கனவே இருந்த மலேசிய செம்பனை ஆய்வு நிறுவனம் (Palm Oil Research Institute of Malaysia) (PORIM); மற்றும் செம்பனை பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் (Palm Oil Registration and Licensing Authority) (PORLA) ஆகிய இரண்டு அமைப்புகளும் ஒன்றாக இணைவதற்கு வழிவகுத்தது.

மலேசிய செம்பனை வாரியம் 1 மே 2000-இல் முறைப்படி செயல்படத் தொடங்கியது. மலேசிய செம்பனை வாரியத்தின் முதல் தலைமை இயக்குநராக, 2006-ஆம் ஆண்டு வரை, யூசோப் பாசிரோன் (Yusof Basiron) என்பவர் பணியாற்றினார்.[2]

அதன் பின்னர் சிலர் தலைமை இயக்குநர் பதவியை வகித்துள்ளனர். 31 சூலை 2018-இல் முகமட் பக்கே சாலே என்பவர், இரண்டு வருட காலத்திற்கு தொழில்துறை ஒழுங்குமுறை மற்றும் ஆய்வு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3]

Remove ads

பொது

மலேசிய செம்பனை வாரியம் என்பது மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு வாரியமாகும். இந்த வாரியத்திற்கு, செம்பனை எண்ணெய் தொழில் வரிகள் மற்றும் ஆய்வுகளுக்கான அரசாங்க மானியங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. செம்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வணிகங்களும் மலேசிய செம்பனை வாரியத்தின் வழியாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வாரியத்தின் தற்போதைய தலைவர் சாரிர் பின் அப்துல் சமாத் (Shahrir bin Abdul Samad); மற்றும் தலைமை இயக்குநர் சூ யூ யென் மே (Choo Yuen May).[4]

இந்த வாரியத்தின் தலைமையகம் சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கியில் உள்ளது. இந்த வாரியத்திற்கு மலேசியாவின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. மேலும் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளிலும்; பிரசல்ஸ் நகரத்திலும் அலுவலகங்கள் உள்ளன.[5][6]

Remove ads

செயல்பாடுகள்

இந்த வாரியத்தின் செயல்பாடுகளில் ஆய்வுகள், பதிப்பு வெளியீடுகள், மேம்பாட்டு விதிமுறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் மலேசியாவில் செம்பனை எண்ணெய் தொழிலை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[7]

மலேசியாவில் செம்பனை எண்ணெய் உற்பத்தியின் அனைத்து நிலைகளையும்; நடவு முதல் ஏற்றுமதி வரை மலேசிய செம்பனை வாரியம் மேற்பார்வையிடுகிறது. அத்துடன் செம்பனை ஆய்வு (Journal of Oil Palm Research) எனும் ஆய்விதழ் உட்பட பல இதழ்களை இந்த வாரியம் வெளியிடுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads