மலேசிய மக்கள் சக்தி கட்சி
மலேசிய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய மக்கள் சக்தி கட்சி (மக்கள் சக்தி) (ஆங்கிலம்: Malaysia Makkal Sakti Party (MMSP); மலாய்: Parti Makkal Sakti Malaysia (PMSM); சீனம்: 馬來西亞人民力量黨; சாவி: ڤرتي مقكل سقتي مليسيا) என்பது மலேசியாவில் மலேசிய இந்தியர்களின் இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 2009 மே 11-ஆம் தேதி உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.
மலேசிய இந்து உரிமைகள் போராட்டக் குழுவின் (HINDRAF) ஒரு பகுதி என அறிவித்து இருக்கும் மலேசிய மக்கள் சக்தி கட்சி; இண்ட்ராப் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆர். எஸ். தனேந்திரன் (R.S. Thanenthiran) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.[2]
இண்ட்ராப் அமைப்பின் சுலோகமான மக்கள் சக்தி (Makkal Sakti); (People's Power) எனும் சொற்களை இந்தக் கட்சி தன் சுலோகச் சொற்களாகப் பயன்படுத்தி வருகிறது.[3]
Remove ads
பொது
2010-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் ஆளும் கூட்டணியாக இருந்த பாரிசான் நேசனல் (BN) தேசிய முன்னணி கூட்டணியுடன் (Barisan Nasional); மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒரு தோழமைக் கட்சியாக இணைந்து செயல்படத் தொடங்கியது.[4]
மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு பல்லாண்டுகள் நிறைவு அடைந்த நிலையில்; பாரிசான் நேசனல் (Barisan Nasional) (BN) தேசிய முன்னணியின் மூலமாக 2202-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரையில் அந்தக் கட்சிக்கு தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.[5]
பாரிசான் நேசனல் கூட்டணி நட்புறவு
இருப்பினும் அந்தக் கட்சி அதன் விசுவாசத்தைத் தொடர்ந்து பாரிசான் நேசனல் தேசிய முன்னணிக்கே வழங்கி வந்தது. இதன் காரணமாக 2202-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு நிபோங் திபால் மக்களவை தொகுதி வழங்கப்பட்டது.[6]
2009 அக்டோபர் 10-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் (Najib Abdul Razak) அவர்களால் மலேசிய மக்கள் சக்தி கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. மலேசிய மக்கள் சக்தி கட்சி, பாரிசான் நேசனல் (BN) தேசிய முன்னணியின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினராக இல்லாவிட்டாலும் அந்தக் கூட்டணியுடன் நட்புறவைப் பேணி வருகிறது.[7]
2020-ஆம் ஆண்டு கட்சி கோரிக்கை
அத்துடன் மலேசிய மக்கள் சக்தி கட்சி, 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் (Malaysia's 14th General Election 2018) பாரிசான் நேசனல் கூட்டணியை வெளிப்படையாக ஆதரித்தது.[8]
[[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில்) மூன்று நாடாளுமன்ற மற்றும் ஏழு மாநிலத் தொகுதிகளில் பாரிசான் நேசனல் கூட்டணியின் கீழ் போட்டியிட கட்சி முடிவு செய்து 2020-ஆம் ஆண்டில் தன் கோரிக்கையை முன்வைத்தது.[9][10]
அகமத் சாகித் அமிடி
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில்) பாரிசான் நேசனல் கூட்டணியின் சார்பாக போட்டியிட மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இடங்கள் வழங்கப்படும் என்று செப்டம்பர் 2021-இல், பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைவர் அகமத் சாகித் அமிடி (Ahmad Zahid Hamidi) அறிவித்தார்.[11]
Remove ads
மலேசியப் பொதுத் தேர்தல், 2022
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads