மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம்map
Remove ads

மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம் (மலாய்: Suruhanjaya Syarikat Malaysia (SSM); ஆங்கிலம்: Companies Commission of Malaysia) (CCM); என்பது மலேசியாவின் பெருநிறுவன வணிகம் (Corporate Business) மற்றும் பொது வணிக விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் மலேசிய நடுவண் அரசு சார்ந்த சட்டப்பூர்வ ஆணையம் (Malaysian Statutory Body) ஆகும்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

இந்த ஆணையம் இணையத் தகவல் சேவையை (SSM e-Info Services) அறிமுகப்படுத்தி உள்ளது. வணிக நிறுவனங்கள் [இணையத்தளம்] வழியாக நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.[2]

முன்பு இயங்கிய வணிக நிறுவனங்களின் பதிவாளர் அமைப்பு (Registrar of Companies); மற்றும் வணிகப் பதிவாளர் அமைப்பு (Registry of Business); ஆகியவற்றின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டது.

Remove ads

பொது

மலேசியாவில் உள்ள வணிக நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் (Incorporate Companies); வணிக நிறுவனங்களைப் பதிவு செய்வதல் (Register Businesses); வணிக நிறுவனங்கள் தொடர்பான வணிகத் தகவல்களை (Provide Company and Business Information) பொது மக்களுக்கு வழங்குதல்; போன்றவை மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.[3]

இந்த ஆணையம் இணையத் தகவல் சேவையை (SSM e-Info Services) அறிமுகப்படுத்தி உள்ளது. [இணையத்தளம்] வழியாக நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.[2]

பெருநிறுவனச் சட்டங்கள்

இந்த ஆணையம் மலேசியாவில் பெருநிறுவன (Corporate Business) நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முன்னணி ஆணையமாகும். வணிகப் பதிவு மற்றும் பெருநிறுவனச் சட்டங்கள் (Corporate Legislation) கடைபிடிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் மேற்கொள்கிறது.[4]

மலேசியாவின் வணிக நிறுவனங்கள் ஆணையம்; 2003-ஆம் ஆண்டில், வணிக நிறுவனங்கள் சட்டம் 1998-இல் (Companies Act 1998) மதிப்பாய்வைத் தொடங்கியது. அந்த மதிப்பாய்வு, மலேசியாவில் வணிகம் செய்ய விரும்புவர்களுக்கான விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்குவது; வணிக முதலீட்டுச் செலவுகளைக் குறைப்பது; ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

வணிக நிறுவனங்கள் சட்டம் 1998, இறுதியில் வணிக நிறுவனங்கள் சட்டம் 2016 (Companies Act 2016) எனும் புதிய சட்டத்தின் மூலமாக மாற்றப்பட்டது. அந்தப் புதியச் சட்டத்தில் சில பெரிய மாற்றங்களும் செய்யப்பட்டன. இரு இயக்குநர்களுக்குப் பதிலாக ஒரே ஓர் இயக்குநர் மட்டும் ஒரு வணிக நிறுவனத்தை (Company Limited) பதிவு செய்யலாம் எனும் மாற்றமே ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது.[5]

Remove ads

வணிக நிறுவனங்கள் சட்டம் 2016

வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை பதிவு செய்து கொள்ள கீழ்க்காணும் முறைகளைத் தேர்வு செய்யலாம்:

  • தனி உரிமையாளர் அல்லது கூட்டுரிமை வணிக நிறுவனம்
  • பங்குகள் மூலம் வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனம்; உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனம்; வரம்பற்ற வணிக நிறுவனம்
  • வரையறுக்கப்பட்ட கூட்டுரிமை வணிக நிறுவனம்
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads