மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம்

மலேசிய அரசு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம்map
Remove ads

மார்டி அல்லது மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம் (மலாய்: Institut Penyelidikan dan Kemajuan Pertanian Malaysia; ஆங்கிலம்: Malaysian Agricultural Research and Development Institute) (MARDI); என்பது மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

இந்த நிறுவனம் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனச் சட்டம் 1969 எனும் சட்டத்தின் (Malaysian Agricultural Research and Development Institute Act 1969) கீழ் நிறுவப்பட்டது.

மலேசியாவின் வேளாண் சார்ந்த தொழில், கால்நடை, விலங்கு நலன், மீன்பிடி, வேளாண் ஆராய்ச்சி, வேளாண் வளர்ச்சி, உணவு பாதுகாப்பு போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்த நிறுவனம் பொறுப்பு வகிக்கிறது.[2]

Remove ads

பொது

ஏறக்குறைய 40 ஆண்டுகளாக மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு முயற்சிகளின் வழியாக பல புதிய தாவர வகைகள் மற்றும் வேளாண் முளைவகை, புதிய கால்நடை இனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.[3]

இந்த ஆய்வு நிறுவனத்தின் வழியாக், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் வளங்களை நிர்வகிப்பதற்கான புதிய தொழில் நுட்பங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

முகவரி

மார்டி தலைமையகம்
Persiaran MARDI-UPM
43400 செர்டாங்
சிலாங்கூர், மலேசியா
தொலைபேசி: 603-8953 6000

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads