மலைக்கோட்டை அரண்மனை
ஐதராபாத்திலுள்ள அரச அரண்மனை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலைகோட்டை அரண்மனை (Hill Fort Palace) ரிட்ஸ் ஹோட்டல் என்றும் அழைக்கப்படும் இது தெலங்காணா மாநிலம் ஐதராபாத்திலுள்ள நௌபத் பகாட்டில் அமைந்துள்ள ஒரு அரச அரண்மனை ஆகும். சொத்து இப்போது தெலங்காணா அரசின் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமானது..[1][2][3]
Remove ads
வரலாறு
குடியிருப்பு (1915-1955)
மலைக்கோட்டை அரண்மனை 1915 இல் இந்தியாவின் நிசாம் அரசாங்கத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நிசாமத் சங் என்பவரால் கட்டப்பட்டது. அவர் அரண்மனையில் 15 ஆண்டுகள் தங்கியிருந்தார். கேம்பிரிட்சிலுள்ள திரினிட்டி கல்லூரியின் பாணியில் கட்டிடக்கலை உள்ளது.[4][3]
1929 இல், சங் ஹஜ் சென்று வந்த பிறகு எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பினார். இந்த அரண்மனை ஓசுமான் அலி கானின் மகன் இளவரசர் மோசாம் சாவுக்கு விற்கப்பட்டது, பின்னர் நகர மேம்பாட்டு வாரியத்தின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.
அரசு கையகப்படுத்துதல் மற்றும் ரிட்ஸ் ஹோட்டல் (1955-1997)
1955 ஆம் ஆண்டு போலோ நடவடிக்கைக்குப் பிறகு இந்த அரண்மானை இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. ரிட்ஸ் ஹோட்டல் நிறுவனம் 1980களில் அரண்மனையை குத்தகைக்கு எடுத்தது. இந்த விடுதி 1997 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை செயல்பட்டு வந்தது.[5][6]
கைவிடப்பட்டது (1997-தற்போது)
இன்று, கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், அவசரமாக சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது.[7][8]
2022 இல், ஒரு நிபுணர் குழு, அரண்மனையை இடிக்க பரிந்துரைக்கும் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.[9][10] பொதுநல வழக்கின் தீர்ப்பில், அரண்மனையை சீரமைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[11]
Remove ads
அமைவிடம்
இந்த அரண்மனை நகரின் மையப்பகுதியில் நௌபத் பஹாட் அருகே 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

