மாச்சாங் பூபோக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாச்சாங் பூபோக் (மலாய்: Machang Bubok; ஆங்கிலம்: Machang Bubok; சீனம்: 马章武莫; சாவி: ماڅڠ بوبوق) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District), புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதியில் (Bukit Mertajam Federal Constituency) உள்ள ஒரு மலேசியப் புதுக்கிராமம் (New Villages) ஆகும்.
கம்போங் மச்சாங் பூபோக் (Kampung Machang Bubok) எனும் கிராமத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இந்தப் புதுக்கிராமம் கெடா, கூலிம் எல்லைக்கு அருகில் உள்ளது.
Remove ads
பொது
மலாயா புதுக்கிராமங்கள்
புதுக்கிராமங்கள் அல்லது மலாயா புதுக்கிராமங்கள் (மலாய்: Kampung Baru; ஆங்கிலம்: New Villages அல்லது Chinese New Villages) என்பது பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும். இவற்றைத் தடுப்பு முகாம்கள் (Internment Camps) என்று அழைப்பதும் உண்டு.[2]
1950-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் திட்டத்தின் (Briggs Plan) ஒரு பகுதியாக இந்த முகாம்கள் உருவாக்கப்பட்டன. கிராமப்புறக் குடிமக்களுக்குள் மறைந்து இருந்த மலாயா தேசிய விடுதலை படையினரின் (Malayan National Liberation Army) ஆதரவாளர்களைத் தனிமைப் படுத்த இந்தப் புதுக்கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது.[3]
பெரும்பாலான புதுக்கிராமங்கள், முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களால் சூழப்பட்டு இருந்தன. தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் செல்பவர்களையும்; ஊரடங்குச் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் வெளியேற முயற்சிக்கும் எவரையும் சுட்டுக் கொல்லவும் கட்டளையிடப்பட்டது.[4]
கிராமப்புறச் சீன சமூகம்
பிரித்தானியர்கள் மலாயாவை விட்டு வெளியேறிய பின்னர், பல புதுக்கிராமங்கள்; சாதாரண குடியிருப்பு நகரங்களாகவும் மற்றும் சில புதுக்கிராமங்கள் சாதாரண கிராமங்களாகவும் மாற்றம் கண்டன.[5]
கூலிம் பகுதியில், கம்யூனிச அச்சுறுத்தலை கட்டுப்படுத்த பிரித்தானியர்கள் கிராமப்புறச் சீன சமூகத்தை குடியேற்றியபோது, இங்கு குடியேறியவர்கள் பெரும்பாலும் சீன ஹக்கா இனத்தைச் சேர்ந்த சீனர் மக்கள் ஆகும்.[6]
Remove ads
அருகாமை கிராமங்கள்
- கம்போங் புக்கிட் தே (Kampung Bukit Teh)
- கம்போங் தோக்குன் அத்தாஸ் (Kampung Tokun Atas)
- தோக்குன் பாவா (Tokun Bawah)
- பெரங்கான் செம்பிலான் (Berangan Sembilan)
- சுங்கை லெம்பு (Sungai Lembu)
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

