மாநில நெடுஞ்சாலை 156 (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

மாநில நெடுஞ்சாலை 156 (தமிழ்நாடு)
Remove ads

மாநில நெடுஞ்சால் 156 (State Highway 156 (Tamil Nadu)) என்பது, கொடைக்கானல் மலைச் சாலையாகும். இது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையால் SH-156 என அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படும் சாலையாகும். இந்தச் சாலை 10°9′10″N 77°41′30″E என்ற இடத்தில் தென்முதன்மை சாலையில் (NH-45), வத்தலகுண்டுற்கு மேற்கே 8 கிலோமீட்டர் (5.0 மைல்) தொலைவில் தொடங்கி கொடைக்கானலில் முடிவடைகிறது. இந்த சாலையின் நீளம் 56.8 கிலோ மீட்டர் (35.3 மைல்) ஆகும்.[1] இந்த சாலையில் கொடைக்கானல் நகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவி ஒன்றும் உள்ளது.[2]

Thumb
Toll House on the Kodai Ghat Road.
விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வரலாறு

2009-ல் ₹60 மில்லியன் செலவில் சாலை பலப்படுத்தப்பட்டது.[3] நிலச்சரிவு காரணமாக சாலையில் ஏற்படும் அபாயத்தினைத் தடுக்க தடுப்பு சுவர் பின்னர் கட்டப்பட்டது.[4] அடுக்கம்-பெரியகுளம் மற்றும் அடுக்கம்-பெருமாள்மலை மலைச் சாலைகள் அதிகப்படியான சேதம் காரணமாக மூடப்படும்போது, ​​இந்த சாலை மாற்றாகப் பயன்படுகிறது.[5]

விபத்து

2010-ல் கனமழை காரணமாக ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து சாலையில் முற்றிலும் தடைபட்டது.[6] 2011ஆம் ஆண்டு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.[7]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads