மார்க்கோர் காட்டு ஆடு

ஒரு பாலூட்டி From Wikipedia, the free encyclopedia

மார்க்கோர் காட்டு ஆடு
Remove ads

மார்க்கோர் காட்டு ஆடு ( ஆங்கிலம்;markhor பஷ்தூ மொழி : مرغومی marǧūmi; பாரசீக மொழி / உருது : مارخور) என்பது ஒரு பெரிய காட்டு ஆட்டு இனம் ஆகும். இவை வட-கிழக்கு ஆப்கானிஸ்தான், வடக்கு பாக்கித்தான், காஷ்மீர், தெற்கு தஜிகிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் காணப்படுகிறன. இந்த ஆட்டு இனத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 2015 வரை அச்சுறு நிலையை அண்மித்த இனம் என மோசமான நிலையில் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 20% அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த மார்கோர் காட்டு ஆடுகளே பாக்கித்தானின் தேசிய விலங்கு ஆகும்.

விரைவான உண்மைகள் மார்கோர் காட்டு ஆடு, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

இவை பருத்த உடலும், அடர்ந்த மென் மயிரும் கொண்டவை. கிடா ஆட்டுக்கு அதன் சாம்பல் நிற பிடரிமயிர் முட்டிவரை தொங்கும். பெட்டை ஆட்டுக்கு இந்த பிடரி மயிர் சற்று குறைந்த நீளத்துடன் முகவாய்க்கட்டைவரை தொங்கும். கிடாவுக்கு நீண்ட தட்டையான முறுக்கிய கொம்புகள் காணப்படும். பெட்டை ஆட்டின் கொம்புகள் சிறியவை. இவற்றின் முடி குளிர் காலத்தில் அழுக்குச் சாம்பல் நிறத்திலும், வெயில் காலத்தில் நீளம் குறைந்து செம்பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads