மாலிம் நாவார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாலிம் நாவார் (Malim Nawar, சீனம்: 双溪古月, மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். ஈப்போ மாநகரம் 40 கி.மீ. வடக்கே உள்ளது. அருகாமையில் கம்பார் நகரம், தாப்பா, பத்து காஜா, கோல டிப்பாங், தஞ்சோங் துவாலாங் போன்ற சிறு நகரங்கள் உள்ளன.[1]

விரைவான உண்மைகள் மாலிம் நாவார்Malim Nawar பேராக், நாடு ...
Remove ads

பொது

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதிக்கு பவானி வீரையா என்பவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

வரலாறு

முன்பு காலத்தில், அலிம் எனும் பெயர் கொண்ட மந்திரவாதி இந்தப் பகுதியில் வாழ்ந்து இருக்கிறார். மாலிம் நாவார் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நோய் நொடிகள் ஏற்பட்டால், அந்த மந்திரவாதியிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டனர். பில்லி, சூன்யம் பிடித்து இருந்தால் அவரிடம் சென்று மந்திர சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.

அவருடைய நல்ல குணங்களுக்காகவும் சமூக சேவைகளுக்காவும் அலிம் எனும் பெயரையே அந்த இடத்திற்கு வைத்தனர். அலிம் எனும் சொல் நாளடைவில் மாலிம் என்று மாறியது. மாவார் என்பது மருந்து நீரைக் குறிப்பதாகும். ஒரு சொற்களும் சேர்ந்து இப்போது மாலிம் நாவார் என்று அழைக்கப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads