மின்திருக்கை

ஒரு மீன் வரிசை From Wikipedia, the free encyclopedia

மின்திருக்கை
Remove ads

உலுக்கு அல்லது மின்திருக்கை (electric ray) என்பது ஒரு திருக்கை குழு ஆகும் மீன் இனத்தைச் சேர்ந்த மீனினமாகும். இதற்குப் பிற திருக்கை மீன்களைப்போல நச்சு ஊசி போன்ற உறுப்பு கிடையாது. மாறாக மின் ஏற்றம்கொண்ட செல்கள் உள்ளன. இந்த செல்களைக்கொண்டு மின்னதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. மின்திருக்கைகளின் அளவைப் பொறுத்து 8இல் இருந்து 220 வோல்ட்வரை மின்னதிர்ச்சி தரவல்லது.[2] இது ஒரு மனிதனையே உயிரிழக்கச் செய்துவிடும். மின்னேற்றம்கொண்ட செல்கள் திருக்கையின் கீழ்புறத்தில் உள்ளன. இந்த செல்களின் எடை திருக்கைமீனின் மொத்த எடையில் சுமார் ஆறில் ஒருபங்கு இருக்கும். இம்மீன்கள் தன் உடலில் உள்ள மின்னாற்றலை பல வழிகளில் பயன்படுத்துகின்றன. இவை வெளிப்படுத்தும் மின்னதிர்ச்சி மற்ற விலங்குகளை அச்சுறுத்துகிறது. இரையைத்தேடிக் கொல்லப் பயன்படுகிறது. மற்ற திருக்கை மீன்களை தொடர்பு கொள்ளவும் பயன்படுத்துகிறது.

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு ...

இது பிற திருக்கை மீன்களைப் போல தட்டை வடிவில் உள்ளது. இதன் வால் உடலைவிட சற்று நீளமாக இருக்கும். மற்ற திருக்கைகள் வாலாலும் உடலாலும் நீந்தும், ஆனால் மின்திருக்கைகள் வாலால் மட்டுமே நீந்தக்கூடியவை, இதனால் இவை மெதுவாகவே நீந்தும். பொதுவாக ஆழ்கடலுக்குள் மணலில் உடலைப் புதைத்துக்கொண்டு இவை மறைந்திருந்து, அதிரடியாகத் தாக்கி இரையைப் பிடிப்பதுதான் திருக்கைகளின் சிறப்பு. இவற்றின் கண்கள் தலையின் மேல்பகுதியில் இருப்பது வேட்டைக்கு வசதியாக இருக்கிறது. இரையைப் பிடிக்கவும் பெரிய உயிரினங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் மின்சாரத் திருக்கைக்கு இந்த மின்சாரமே பலமுள்ள ஆயுதமாக உள்ளது.[3]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads