மீக்கடத்துதிறன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீக்கடத்துதிறன் அல்லது மிகைக்கடத்தல் (superconductivity) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் மின்தடை சுழி மதிப்பினை அடையும்போது அத்திறனுடன் மின்னோட்டதை கடத்தும் தன்மை ஆகும். சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மீக்கடத்துத்திறனை முதலில் ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் என்பவர் 1911 இல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் பாதரசத்தின் மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவதைக் கண்டறிந்தார்.உலோகங்களும் அவைகளின் கலவைகளும் மின்சாரத்தினை எளிதில் கடத்துகின்றன. அவைகள் மின்னோட்டத்திற்கு ஒரு தடையினை கொடுக்கின்றன. இந்த மின்தடை வெப்பநிலையுடன் மாறுகிறது. வெப்பநிலை குறையும் போது தடையும் குறைகிறது. வெப்பநிலை தனிவெப்ப கீழ்வரம்பை (Absolute zero ) எட்டும் போது இத்தடை சுன்னமாகிறது. இப்போது மின்னோட்டத்திற்கு தடை இல்லாத்தால் மின்சாரம் தொடர்ந்து பாய்கிறது.[1][2][3]


Remove ads
உலோகத்தின் பண்புகள்
- மின்தடை : Ω அளவிற்கு மிகக்குறைவு
- அதிக மின்புலத்திற்கு உட்படுத்தும் போது மீக்கடத்தும் திறனை இழக்கிறது
- மின்புலத்தில் வைக்கும் போது டையா காந்தமாக செயல்படுகிறது
வகைகள்
மின்காந்த புலத்தில் இவைகளின் செயல்பாடுகள் வைத்து இவ்வகை உலோகங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை,
- வன் மீக்கடத்திகள்
- மென் மீக்கடத்திகள்
பயன்பாடுகள்
மீக்கடத்திகள் மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில் மிகவும் பயன்படுகிறது
- மீக்கடத்து இயற்றிகளில், ஆற்றல் சேமிப்பு திறன் அடிப்படையாக உள்ளது.
- மீக்கடத்து திறன் கொண்ட காந்தங்கள் இரயில் வண்டிகளை தண்டவாளங்களில் இருந்து உயர்த்த பயன்படுகின்றன.
- கணினிகளில் நினைவு சேமிக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளன.
- மூளைகளின் அலைகளை ஆராய்ந்து கட்டிகளையும், பாதிப்படைந்த செல்களை நீக்க உதவுகிறது.
- மிகவும் SQUIDதொழில்நுட்பம் மூலம் நுட்பமான காந்தமானிகளை உருவாக்கல்.
- வேகமான இலத்திரனியல் மின்சுற்றுக்கள்.
- ஆற்றல் மிகுந்த மீக்கடத்தும் மின்காந்தங்களை காந்த அதிர்வு அலை வரைவு போன்ற சாதனங்களில் பயன்படுத்தல்.
- மின்சக்தி விரயம் குறைந்த மின்கம்பிகள்.
- நுட்பமான மின்னியற்றி மற்றும் மின்சார இயக்கி.
- மருத்துவத்தில் குறைவெப்ப அறுவை மருத்துவம் (Cryosurgery ), மற்றும் காந்த ஒத்ததிர்வு படவியலிலும் (MRI ) பெரிதும் பயன்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
- மீக்கடத்துதிறனின் தொழில்நுட்பப் பயன்பாடுகள்
- மெய்சனர் விளைவு
- லண்டன் கோட்பாடு
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads