முகமது நவாஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முகமது நவாஸ்( Mohammad Nawaz (Urdu: محمد نواز; பிறப்பு: மார்ச் 21, 1994) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் ஆவார் .[1] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் பாக்கித்தான் தேசிய வங்கி அணி , 15 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி, 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி, 23வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி ,குவெத்தா கிளாடியேட்டர்ஸ், ராவல்பிண்டி, ராவல்பிண்டி ராம்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[2][3]2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடிய பாக்கித்தான் அணியில் இடம் பெற்றிருந்தார்.[4] 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் குவெத்தா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருது வென்றார்.[5]

Remove ads

சர்வதேச போட்டிகள்

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரின் பன்னாட்டு இருபது20 தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பெப்ரவரி 29 இல் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது. இவரைப பந்துவீச அழைத்த அப்போதைய அணியின் தலைவர் சாகித் அஃபிரிடியின் முடிவு தவறானது என அப்போதைய அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிசு தெரிவித்தார்.[6]

ஒருநாள் போட்டிகள்

2016 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்டு 18, இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 50 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து மெகர்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 255 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[7] 2016 ஆம் ஆண்டில் தேசிய பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட்நாயகன் விருதினை வென்றார்.[8]

தேர்வுத் துடுப்பாட்டம்

பின் 2016 ஆம் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 13 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 16 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் முதல் ஆட்டப் பகுதியில் 11 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து காலின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 3 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 56 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads