முக்கா

சரவாக் மாநிலத்தில் அமைந்து உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

முக்காmap
Remove ads

முக்கா (மலாய் மொழி: Mukah அல்லது Muka; ஆங்கிலம்: Mukah; சீனம்: 沐胶) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது முக்கா மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் முக்கா நகரம் Mukah TownBandar Mukah, நாடு ...

முக்கா நகரம், முக்கா ஆற்றின் முகப்பில், முக்கா கரி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் இன்னும் கரி சதுப்பு நிலக் காடுகளால் சூழப்பட்டுள்ளது.[2]

Remove ads

வரலாறு

மெலனாவ் மக்கள்தான் முக்காவில் முதன்முதலில் வாழ்ந்த பழங்குடியினக் குழுவாகும். முக்காவின் தொடக்கக்கால ஆவணங்கள் மயாபாகித் பேரரசின் வரலாற்றில் காணப்படுகின்றன. "மெலனோ" என்று அழைக்கப்படும் ஓர் இடம் மயாபாகித் பேரரசுக்குத் திறை செலுத்தியாகவும் அறியப் படுகிறது.

பின்னர் மெலனோ எனும் அந்த இடம் 13-ஆம் நூற்றாண்டில் புரூணை பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1860-இல் சரவாக் வெள்ளை இராஜாக்களுக்கு விற்கப்பட்டது.[3]

Remove ads

பொது

முக்கா நகரில் ரிங்கிட் 48 மில்லியன் செலவில் ஒரு கடற்கரை சாலை அண்மையில் உருவாக்கப்பட்டது.

கோலா பலிங்கியான் (Kuala Balingian); பாலிங்கியான்; முக்கா; தலாத்; ஓயா; இகான்; மாத்து; தாரோ ஆகிய நகரங்களை இணைக்கும் ஒரு கடற்கரை சாலை.

2005-ஆம் ஆண்டில் முக்கா ஆற்றின் மீது 170 மீட்டர் இரட்டை வளைவு தொங்கு பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

முக்கிய வேளாண்மை பொருட்கள் செம்பனை, சவ்வரிசி, நெல், அன்னாசி மற்றும் மீன் வளர்ப்பு.

Remove ads

மக்கள்தொகை

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, முக்கா பிரிவில் மெலனாவ் மக்களே மிகப்பெரிய இனக்குழுவாகும். மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களை மெலனாவ் என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.[10] இபான் மக்கள் 18.6%. இரண்டாவது பெரிய இனக்குழு.[4]

மேலதிகத் தகவல்கள் முக்காவில் உள்ள இனக்குழுக்கள் (2010) ...

காலநிலை

முக்கா நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், முக்கா, மாதம் ...
Remove ads

முக்கா வானூர்தி நிலையக் காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads