முதலாம் புர்கான் நிசாம் ஷா
அகமதுநகர் சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் புர்கான் நிசாம் ஷா (Burhan Nizam Shah I) மத்திய இந்தியாவில் உள்ள அகமதுநகர் சுல்தானகத்தின் ஆட்சியாளராக இருந்தார். நிசாம் சாகி வம்சத்தின்[1] மாலிக் அகமது தனது பெயராய் அகமதுநகரை நிறுவி அதனை தமது சுல்தானகத்தின் தலைநகராகக் கொண்டார்.[2] [3]
தனது ஏழு வயதாக இருந்தபோது புர்கான் 1508[3] அல்லது 1510 இல்[4] தனது தந்தை முதலாம் அகமது நிசாம் ஷா இறந்தவுடன் அரியணை ஏறினார். [5] இவர் 1553 இல் இறந்தார் . இவருக்குப் பின் முதலாம் உசைன் நிசாம் ஷா ஆட்சிக்கு வந்தார்.
இவர் சியா இசுலாமுக்கு மாறினார். அரச குடும்பத்தாரும், பொது மக்களும் இதைப் பின்பற்றினர். சன்னி இறையியலாளர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இதை எதிர்த்தனர். ஆனால் நசுக்கப்பட்டனர்.[6] இவரது ஆட்சி மத சகிப்புத்தன்மை, கலை மற்றும் செழிப்பான வர்த்தகத்தால் வகைப்படுத்தப்பட்டது. முகலாயர்கள், பிஜப்பூர் மற்றும் பல்வேறு சிறிய மாநிலங்களுடனான மோதல்கள் இவரது ஆட்சியில் தொடர்ந்தன. அகமதுநகர் நகருக்கு தென்கிழக்கே இரண்டு மைல் தொலைவில் இவரது நினைவாக ஒரு அரண்மனைக் கட்டப்பட்டது. இது இப்போது இடிபாடுகளுடன் காணப்படுகிறது.[5]
Remove ads
குடும்பம்
புர்கான் நிசாம் ஷாவுக்கு பீபி அமினா. பீபி மரியம் என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். பிஜப்பூர் இவருக்கு ஆறு மகன்கள் இருந்தனர்: [7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads