மெர்டேக்கா 118

From Wikipedia, the free encyclopedia

மெர்டேக்கா 118
Remove ads

மெர்டேக்கா 118 அல்லது மெனாரா வாரிசான் மெர்டேக்கா (மலாய்; ஆங்கிலம்: Merdeka 118) என்பது மலேசியா, கோலாலம்பூரில் 678.9 மீ (2,227 அடி) உயரத்தில் உள்ள 118-அடுக்கு அதி உயர வானளாவிய கட்டிடமாகும். இது 828 மீ (2,717 அடி) உயரத்தில் உள்ள புர்ஜ் கலிபாவிற்கு அடுத்த நிலையில், உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் மற்றும் கட்டமைப்பாகும்.

விரைவான உண்மைகள் மெர்டேக்கா 118Merdeka 118 Merdeka PNB 118, முந்திய பெயர்கள் ...

கட்டிடத்தின் பெயர், மெர்டேக்கா (இது மலாய் மொழியில் "சுதந்திரம்" என்று பொருள்படும்), மெர்டேக்கா அரங்கத்திற்கு [9] அருகாமையில் இருந்ததால் ஈர்க்கப்பட்டது.

இது மலேசியா மற்றும் தென்கிழக்காசியாவின் மிக உயரமான கட்டடம் ஆகும். இது 453.6 m (1,488 அடி) எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் எனும் வானளாவியையும் தாண்டிய நிலையில் மலேசியாவின் மிக உயரமான கட்டடமாக மாறியது. மற்றும் 461.2 m (1,513 அடி) லாண்ட்மார்க் 81 அதன் 158 m (518 அடி) உயரமான கூர்மைக் கோபுரத்தின் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் மிக உயரமான கட்டிடமாக மாறியது.[10]

ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் (Leadership in Energy and Environmental Design) உட்பட உலகளாவிய நிலைத்தன்மை சான்றிதழிலிருந்து மூன்று பிளாட்டினம் மதிப்பீட்டைப் பெறும் கட்டிடங்களில் இந்தக் கட்டிடம் மலேசியாவில் முதல் கட்டிடடமாக அமைகிறது.[10]

Remove ads

கண்ணோட்டம்

மெர்டேக்கா 118 (முழு வளாகத்தின்) மேம்பாடு என்பது 19 ஏக்கர் (7.7 எக்டேர்) நிலம் பெர்மோடாலான் நேசனல் பெர்காட் (Permodalan Nasional Berhad) மூலம் RM ரிங்கிட் 5 பில்லியன் (US $ 1.21 பில்லியன்) நிதியளிக்கப்பட்டது, [11][12] 2023-இல் கட்டி முடிக்கப்பட்ட போது, இந்தக் கோபுரம் மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக மாறியது. கோபுரத்தில் 118 மால் எனப்படும் வணிக வளாகமும் உள்ளது.

இருப்பிடம் மற்றும் தளம்

இந்த கட்டிடம் ஆங் ஜெபாட் சாலையில், முன்னாள் மெர்டேக்கா பூங்கா இருந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்தத் தளம் பெட்டாலிங் தெரு, மெர்டேக்கா அரங்கம், ஸ்டேடியம் நெகாரா மற்றும் சின் வூ ஸ்டேடியம் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

தள திட்டங்கள்

அனைத்து மாடித் திட்டங்களும் கட்டிடத்தின் முன்மொழிவுகளில் இருந்து பெறப்பட்டவை மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை[13]

மேலதிகத் தகவல்கள் மாடிகள், கருத்து ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads