மேல்நாட்டு மருமகள்
ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேல் நாட்டு மருமகள் (Melnaattu Marumagal) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் அமெரிக்க அம்மாயி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார் - மோகன்
- கமல்ஹாசன் - ராஜா
- 'குமாரி' லாரன்ஸ் பொர்டலெ (Laurance Pourtale) - மீரா
- ஜெயசுதா - சுதா
- ஜூனியர் பாலையா - வாலு
- எஸ். வி. ராமதாஸ்
- காந்திமதி - பங்கஜம்
- பூர்ணம் விஸ்வநாதன் - பழனிவேல்
- வி. கோபாலகிருஷ்ணன்
- உஷா உதூப்
- வாணி கணபதி
- சோ ராமசாமி (சிறப்புத் தோற்றம் )
- மனோரமா (சிறப்புத் தோற்றம் )
தயாரிப்பு
ஜூனியர் பாலையா இத்திரைப்படம் மூலம் திரைப்பட துறையில் அறிமுகமானார்.[2] பாடகர் உஷா உதூப் தமிழில் முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடல் பாடியதோடு அப்பாடலுக்கு திரையிலும் நடித்துள்ளார்.[3] நடிகர் கமல்ஹாசன் மற்றும் வாணி கணபதி இணைந்து நடித்த ஒரே படமாகும், பின்னாளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
பாடல்கள்
குன்னக்குடி வைத்தியநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4] 'பூவை செங்குட்டுவன்', 'உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்' , 'நெல்லை அருள்மணி', 'திருச்சி பரதன்', கீதா பிரியன், குயிலி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[5][6]
எண். | பாடல் | பாடகர்(கள்) |
1 | "கௌ வொண்டர்புல்" (How wonderful) | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் |
2 | "கலைமகள் கை" | வாணி ஜெயராம், டி.கே. கலா |
3 | "லவ் இஸ் எ பியூட்டிபுல்" (Love is a beautiful) | உஷா உதூப் |
4 | "முத்தமிழில் பாட" | வாணி ஜெயராம் |
5 | "பல்லாண்டு பல்லாண்டு" | வாணி ஜெயராம், டி.கே. கலா |
6 | "சுகம் தரும்" | ராஜேஷ், மனோகரி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads