ஏ. பி. நாகராசன்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் (ஏ. பி. நாகராஜன், பெப்ரவரி 24, 1928 – ஏப்ரல் 5, 1977[1]), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.

விரைவான உண்மைகள் ஏ.பி.நாகராசன், பிறப்பு ...
Remove ads

தொடக்ககால வாழ்க்கை

ஏ. பி. நாகராஜன் , நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே , டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்தும் வந்தார். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில், ஈடுபாடு உடையவராக இருந்தார்.

திரைப்படத் துறை பங்களிப்புகள்

1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" , திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே, அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. நால்வர் திரைப்படத்தில், கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டில் , 'நம் குழந்தை' மற்றும் 'நல்ல தங்காள்' திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் சிவாஜி கணேசன் நடித்த, 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்திற்கு, திரைக்கதை வசனம் எழுதியபோது, அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் அறிமுகமானார். 'திருவிளையாடல்' படத்தில், ஏ. பி. நாகராஜன் 'புலவர் நக்கீரர்' வேடத்தில் நடித்தார். 'மாங்கல்யம்' படத்தில், திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் , நடிக்கவும் செய்தார்.

1957ஆம் ஆண்டில் , நடிகர் வி. கே. ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களைப் பெற்ற மகராசி, நல்ல இடத்து சம்பந்தம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில், சமூக சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன், 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", "கந்தன் கருணை", "திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு, கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.

இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்

  1. வடிவுக்கு வளைகாப்பு (1962)
  2. குலமகள் ராதை (1963)
  3. நவராத்திரி (1964)
  4. திருவிளையாடல் (1965)
  5. சரஸ்வதி சபதம் (1966)
  6. கந்தன் கருணை (1967)
  7. திருவருட்செல்வர் (1967)
  8. சீதா (1967)
  9. திருமால் பெருமை (1968)
  10. தில்லானா மோகனாம்பாள் (1968)
  11. குருதட்சணை (1969)
  12. வா ராஜா வா (1969)
  13. விளையாட்டு பிள்ளை (1970
  14. திருமலை தென்குமரி (1970)
  15. கண்காட்சி (1971)
  16. அகத்தியர் (1972)
  17. திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
  18. காரைக்கால் அம்மையார் (1973)
  19. ராஜராஜ சோழன் (1973)
  20. திருமலை தெய்வம் (1973)
  21. குமாஸ்தாவின் மகள் (1974)
  22. மேல்நாட்டு மருமகள் (1975)
  23. ஜெய் பாலாஜி (1976)
  24. நவரத்னம் (1977)
  25. ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)

கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்

  1. நீலாவுக்கு நெறஞ்ச மனசு
  2. மாங்கல்யம் (1954)
  3. பெண்ணரசி (1955)
  4. ஆசை அண்ணா அருமை தம்பி (1955)
  5. நல்ல தங்கை (1955)
  6. நான் பெற்ற செல்வம்

திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்

  1. சம்பூரண இராமாயணம்

கதை எழுதிய திரைப்படங்கள்

  1. டவுன் பஸ் (1955)

நடித்த திரைப்படங்கள்

  1. திருவிளையாடல் - நக்கீரன்
  2. அருட்பெருஞ்ஜோதி - ராமலிங்க அடிகளார் சுவாமி
Remove ads

பெற்ற விருதுகள்

  1. திருவிளையாடல் (1965) - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
  2. தில்லானா மோகனாம்பாள் (1968) - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads