மைக்ரோகிராம்

நிறையின் அலகு மற்றும் கிராமின் மில்லியனில் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மைக்ரோகிராம் (microgram அல்லது microgramme, μg) என்பது மெட்ரிக் முறையில், திணிவின் ஓர் அலகு ஆகும். இது கிலோகிராமின் பில்லியனில் ஒன்று (1×10−9), கிராமின் மில்லியனில் ஒன்று (1×10−6), அல்லது மில்லிகிராமின் ஆயிரத்தில் ஒன்று (1×10−3) ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் (SI) இதன் குறியீடு μg ஆகும். இங்கு மைக்ரோ என்பது கிரேக்க எழுத்தான μ (மியூ) ஆல் தரப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்கா

மைக்ரோ என்பதை தவறுதலாக மில்லி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமிருப்பதால், ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவத் தரவுகளில் μg என்பதற்குப் பதிலாக mcg என்ற குறியீட்டைப் பயன்படுத்துமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பரிந்துரைத்துள்ளது.[1][2] ஆனாலும், mcg என்பது பழைய, தற்போது பயன்பாட்டிலில்லாத CGS முறையில் மில்லிசென்டிகிராமை (=10 μg) குறிக்கும்.

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியத்தில், மில்லிகிராம், மைக்ரோகிராம் ஆகியவற்றுக்கிடையேயான குழப்பங்களில் மருத்துவத் துறையில் தீவிரமான தவறுகள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு, இசுக்கொட்லாந்து நோய்த் தவிர்ப்புப் பேணல் வழிகாட்டுதலின் படி, அங்கு ஒரு மில்லிகிராமுக்கும் குறைவான மருந்துகளில் “mcg” அல்லது “μg” என எழுதாமல் "மைக்ரோகிராம்" என்ற முழுச் சொல்லையும் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads