ரியாத் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

ரியாத் மாகாணம்map
Remove ads

ரியாத் பிராந்தியம் (Riyadh Province, அரபி: منطقة الرياض Manṭiqat ar-Riyāḍ ) அதிகாரப்பூர்வமாக ரியாத் மாகாணத்தின் எமிரேட் என்றும் அழைக்கப்படும் ரியாத் மாகாணம் என்பது சவூதி அரேபியாவின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 404,240 கி.மீ² ஆகும். 2017 ஆம் ஆண்டில் இது 8,216,284 மக்கள்தொகையுடன் இருந்தது. [1] இது பரப்பளவு மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில், முறையே கிழக்கு மாகாணம் மற்றும் மக்கா மாகாணத்துக்கு அடுத்து, இரண்டாவது பெரிய பிராந்தியமாகும். மாகாணத்தின் தலைநகரான கவர்னரேட்டாக ரியாத் கவர்னரேட் உள்ளது. இது பிராந்திய இராச்சியத்தின் தலைநகரான ரியாத்தின் பெயரைக்கொண்டுள்ளது. இது பிராந்தியத்திலும் இராச்சியத்திலும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் சற்று குறைவாகன மக்கள் ரியத் நகரத்திற்குள் வசிக்கிறனர்.

விரைவான உண்மைகள் ரியாத் மாகாணம் منطقة الرياض, நாடு ...
Thumb
ரியாத் பிராந்தியத்தின் கவர்னரேட்டுகள்

இப்பிராந்தியத்தில் உள்ள பிற நகரங்களாக அல் காட், சுல்பி மற்றும் மஜ்மா ஆகியவை உள்ளன. பிராந்தியத்தின் ஏறத்தாழ பாதி பகுதி பாலைவனமாகும். மேலும் இது ராஜ்யத்தின் பிற பிராந்தியங்களை மட்டுமே எல்லையாகக் கொண்டுள்ளது; இதற்கு சர்வதேச எல்லைகள் இல்லை. இப்பிராந்தியத்தின் எல்லைகளாக, வடக்கிலிருந்து கடிகார சுற்றில், கிழக்கு மாகாணம், நஜ்ரான் பிராந்தியம், 'ஆசிர் பிராந்தியம், மக்கா பிராந்தியம், மதீனா பிராந்தியம், அல்-காசிம் பிராந்தியம் போன்றவை உள்ளன. இது இராச்சியத்தின் கடற்கரை இல்லாத 7 பிராந்தியங்களில் ஒன்றாகும்.

Remove ads

மக்கள் தொகை

1992 முதல் மக்கள் தொகை வளர்ச்சி:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

உட்பிரிவுகள்

ரியாத் நகராட்சியைத் தவிர, இப்பகுதி 19 கவர்னரேட்டுகள் (முஹாபாசாத்) மற்றும் 1 துணை கவர்னரேட்டுகளாக (மார்கஸ்) பிரிக்கப்பட்டுள்ளது:

  • லயலா
  • 'அஃபிஃப்
  • அல்-துவாத்மி
  • அல்-காட்
  • அல்-குவேய்யா
  • அல்-ஹரீக்
  • அல்-சாய்
  • அல் மஜ்மா
  • அல்-முசாஹ்மியா
  • அல்-சுலாயில்
  • த்ருமா
  • திர்ய்யா
  • ஹாட் பனி தமீம்
  • ஹுரைமிலா
  • ரிமா
  • ஷாக்ரா
  • தாடிக்
  • வாடி அட்-தவாசீர்
  • சுல்பி சிட்டி
  • ரியாத் நகராட்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள மராட்டின் துணை கவர்னரேட் (markaz) .
  • யாப்ரின்
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads