ரீதிகா கெரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரீதிகா கெரா (Reetika Khera) ஓர் இந்திய வளர்ச்சி பொருளாதார நிபுணர் ஆவார். [1] கெரா டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி டெல்லி) பொருளாதாரப் பிரிவில் இணைப் பேராசிரியராக உள்ளார். [2] இவர் 2018-20 வரை அகமதாபாத் (ஐஐஎம் அகமதாபாத்) இந்திய மேலாண்மை நிறுவனத்தில் இணை பேராசிரியராக (பொருளாதாரம் மற்றும் பொது அமைப்புகள் குழு) இருந்தார். [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

ரீதிகா கெரா பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்தின் தில்லிப் பொருளியல் பள்ளியில் முதுகலைப் பட்டமும் , இங்கிலாந்தின் பிரைட்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் வளர்ச்சி ஆய்வுகளில் எம்.பில் பட்டமும் பெற்றார். தில்லி பொருளியல் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றார்.இவர் பரோடாவின் ஜீசசு மற்றும் மேரி கான்வென்ட்டில் [4] தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் பிரபல பொருளாதார நிபுணர் மற்றும் ஆர்வலர் ஜீன் ட்ரோசுடன் இணைந்து பங்களிக்கிறார்.

இவர் பொருளாதார வளர்ச்சிக்கான நிறுவனம், காமன்வெல்த் உதவித்தொகை திட்டம், கிங்ஸ் கல்லூரி லண்டன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து நோபல் பரிசு பெற்ற சர் ஆங்கசு டீடனுடன் ஒரு திட்டத்திற்காக ஆய்வுதவித் தொகை பெற்றார்.

Remove ads

தொழில்

ரீதிகா கெரா ஒரு வளர்ச்சி பொருளாதார நிபுணர். டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் இணைத் தலைவர் பேராசிரியராக இருந்து , அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக (பொருளாதாரம் மற்றும் பொது அமைப்புகள் குழு) இருந்தார். கெரா நாட்டில் மேம்படுத்தப்பட்ட நலத்திட்டங்களுக்கான ஆதரிப்பவராக இருந்தார், மற்றும் இந்தியாவின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தினை செயல்படுத்த தீவிரமாக உதவினார்.[சான்று தேவை]

இவர் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தில்பணிபுரிந்தார் மற்றும் தில்லி பொருளாதரப் பள்ளியில் வளர்ச்சி பொருளாதார மையத்தில் பார்வையாளராக உள்ளார். என்ஆர்ஜிஏ, பொது விநியோக அமைப்பு (PDS) மற்றும் இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களை பாதிக்கும் பிற திட்டங்களை பகுப்பாய்வு செய்யும் பல ஆய்வுக் கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். இவரது மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று "குழு அளவீடு" ஆகும், இது NREGA திட்டம் இந்தியாவின் குடிமக்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை மதிப்பிட்டது .[5] அக்டோபர் 2017 இல், இவர் இசுட்டாடான்போர்டு மனிதநேய மையத்தில் கௌரவ ஆசிரியக் குழு உறுப்பினராக இருந்தார் [6] மற்றும் இந்தியாவின் ஆதார் திட்டம் குறித்த புத்தகத்தைத் திருத்தும் (தெற்கு ஆசியாவின் மையத்தால்) குழுவினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

Remove ads

படைப்புகள்

புத்தகங்கள்

ஆதார் மீதான கருத்து வேறுபாடு, பிக் டேடா மீட்சு பிக் பிரதர்

ட்ரோசு, ஜீன் மற்றும் கெரா, ரீதிகா (2015), [நல் ரீடிங்சு இன் சோசியல் பாலிசி அண்ட் பப்ளிக் ஆக்சன்], வெளியிடப்படாத தொகுப்பு.

டி, அனுராதா, கெரா, ரீதிகா, குமார், ஏ.கே.சிவா, சாம்சன் மீரா (2011), புரோப் ரீவிசிட்டட் (புது டெல்லி: ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி எழு).

பேட்டில் பார் எம்ப்ளாய்மெண்ட் கியாரண்டி (2011), (புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பதிப்பகம் ).

சிட்டிசன்'சு இனிசியேட்டிவ் ஃபார் ரைட் ஆஃப் சில்ட்ரன் அண்டர் சிக்சு (2006), ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், சுருக்கமான அறிக்கை (புதுடில்லி: உணவு உரிமை பிரச்சாரம்).

தேய், நிகில், ட்ரோஸ், ஜீன் அண்ட் கெரா, ரீதிகா (2006),எம்பாள்யிமெண்ட் கியாரண்டீ:எ பிரைமர் (புது டெல்லி: நேஷனல் புக் டிரஸ்ட்).

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads