லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லிட்டில் இந்தியா சிங்கப்பூர், (ஆங்கிலம்: Little India Singapore), என்பது சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் (Singapore River) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். இந்த நகர்ப்பகுதி, சிங்கப்பூர், சைனாடவுனுக்கு (Chinatown) எதிரே ஆற்றுக்கு அடுத்த பக்கத்திலும், கம்போங் கிலாமுக்கு (Kampong Glam) வடக்கிலும் அமைந்துள்ளது.[1]
உள்ளூர் தமிழ் மக்கள் இதனைத் தேக்கா (Tekka) என்று அழைப்பதுண்டு. தேக்கா என்பது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பேரங்காடி ஆகும். இங்கு பல்வகை உணவகங்களும், வணிகக் கடைகளும் உள்ளன. புக்கிட் தீமா சாலையும், செராங்கூன் சாலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. [2]
Remove ads
வரலாறு
லிட்டில் இந்தியா, கம்போங் சூலியா (Chulia Kampong) பகுதியில் இருந்து வேறானது. இனங்களைப் பிரித்து வைக்கும் பிரித்தானியக் கொள்கைப்படி, தமிழ் குடியேற்றவாசிகளுக்காக உருவாக்கப்பட்ட காலனியச் சிங்கப்பூரின் ஒரு பிரிவே கம்போங் சூலியா.
இது சிங்கப்பூரின் ராபிள்சு திட்டத்தின் கீழ் (Raffles Plan of Singapore) உருவாக்கப்பட்டது. கம்போங் சூலியா நெருக்கடி மிக்கதாகி நிலத்துக்கான போட்டி அதிகரித்தபோது, தமிழர் பலர், இன்று லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் குடியேறினர். இன்று கம்போங் சூலியா ஒரு தனிப் பகுதியாக இல்லை.
தமிழ் இனக் குடியிருப்புப் பகுதி
லிட்டில் இந்தியா, முன்னர் தமிழ் குற்றவாளிகளுக்கான குடியிருப்பைச் சுற்றி உருவானது. செராங்கூன் ஆற்றை அண்டி இருந்தமையால் அக்காலத்தில் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற இடமாக இது இருந்ததுடன், இப்பகுதியில் கால்நடை வணிகமும் முக்கிய செயற்பாடாக விளங்கியது.
தொடர்ந்து பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் வளர்ச்சியுற்றன. 20-ஆம் நூற்றாண்டு தொடங்கும்போது, இந்தப் பகுதி ஒரு தமிழ் இனக் குடியிருப்புப் பகுதியாகத் தெரியத் தொடங்கிவிட்டது.
Remove ads
இதையும் பார்க்கவும்
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads