வல்சாடு
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்சாடு (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் வல்சாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் அரபுக் கடலின் காம்பே வளைகுடாவிற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.[2].அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த ஊர் இது.
Remove ads
பெயர்க் காரணம்
குஜராத்தி மொழியில் வல்சாட் என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ஆலமரம் என்று பொருள் தருகிறது. வட என்பதற்கு ஆல் என்றும், சாட் என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சத் நகர மக்கள் தொகை 1,45,592 ஆகும்.[3]. அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 80%ஆக உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
தொடருந்து நிலையம், மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்
- தீத்தல் கடற்கரை
- சுவாமி நாராயணன் கோயில்
- சாய்பாபா கோயில்
படக்காட்சியகம்
- தீத்தல் கடற்கரை
- சுவாமி நாராயணன் கோயில், தீத்தல்
- சுவாமி நாராயணன் கோயில், வல்சத்
- சாய்பாபா கோயில் தீத்தல்
- வல்சாட் இரயில் நிலையம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads