வாக்பதானந்தா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாக்பதானந்தா (1885 அக்டோபர் 1939) என்று பிரபலமாக அறியப்படும் வயலேரி குஞ்ஞிகண்ணன் குருக்கள் (Vayaleri Kunhikkannan Gurukkal) பிரித்தானிய இந்தியாவில் ஒரு இந்து மதத் தலைவராகவும் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். “ஆத்மவித்யா சங்கம்” என்பதை நிறுவினார். இது அடிப்படையில் மாற்றத்தை விரும்பும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களின் குழுவாகும். இவர், மேலும் உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தையும் உருவாக்கினார்.[1]

விரைவான உண்மைகள் வாக்பதானந்தா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

1885 ஆம் ஆண்டில் கூத்துப்பறம்புக்கு அருகிலுள்ள பட்டியோமில் ஒரு ஈழவர் குடும்பத்தில் பிறந்த வாக்பதானந்தா பாரம்பரிய குரு-குலக் கல்வி முறையில் படித்தார்.[2] இவர் இந்து சமய வேதங்கள், மெய்யியல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். பின்னர் பல ஊர்களுக்கு பயணம் செய்து, ஒரு சிறந்த மற்றும் சமத்துவ சமுதாயத்திற்காக உலகளாவிய இரட்டைத்தன்மை பற்றிய போதனைகளைப் பரப்பினார். பின்னர், கோழிக்கோட்டில் சமசுகிருதப் பள்ளியைத் தொடங்கினார். அதே நேரத்தில் பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.[3] 1920 ஆம் ஆண்டில் வாக்பதானந்தாவால் நிறுவப்பட்ட “ஆத்மவித்யா சங்கம்” என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மலபாரில் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாக இருந்தது. நாராயணகுருவைப் போலவே, வாக்பதானந்தாவும் ஆதி சங்கரரின் அத்வைதப் பாதையைப் பின்பற்றினார்.[3]

Remove ads

இயக்கம்

1917 ஆம் ஆண்டில், வாக்பதானந்தா “ஆத்மவித்யா சங்க”த்தை நிறுவி அதன் கொள்கைகளை “ஆத்மவித்யா” என்ற தலைப்பில் வெளியிட்டார்.[4] அதே காலத்தில் நாராயணகுருவால் நிறுவப்பட்ட “ஸ்ரீ நாராயண அறக்கட்டளை”யைப் போலல்லாமல், ஆத்மவித்யா சங்கம் பெரும்பாலும் தொழில் வல்லுநர்களையும் அறிஞர்களையும் கொண்டிருந்தது. மேலும், சீர்திருத்தத்திற்கான மதச்சார்பற்ற அணுகுமுறையைக் கொண்டிருந்தது.[5] இப்பகுதியின் விவசாயிகளிடையே வர்க்க அமைப்புகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் இது முக்கியப் பங்கு வகித்தது. அதிகப்படியான நிலப்பிரபுத்துவ மற்றும் மத மரபுவழி நிறுவனத்திற்கு எதிர்ப்பாக மார்க்சிய-லெனினிச கருத்துக்களை பரப்பியது. பொருளாதார சுரண்டல் மற்றும் அதை ஆதரிப்பதில் வெளிநாட்டு அரசாங்கங்களின் பங்கு ஆகிய இரண்டையும் வாக்பதானந்தாவே விமர்சித்தார்.[6]

1925 ஆம் ஆண்டில் உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தை உருவாக்க வாக்பதானந்தா ஊக்கமளித்தார்.[7]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads