விக்கிரம சோழன் உலா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விக்கிரம சோழன் உலா, உலா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூலாகும். மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் என்பார் இந்நூலை இயற்றினார். இவர் விக்கிரம சோழன் உலாவுடன், குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என்பவற்றையும் சேர்த்து மூவருலா எனப்படும் மூன்று உலா நூல்களை இயற்றியிருப்பினும், விக்கிரம சோழன் உலாவே அவற்றுள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்நூல் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

Remove ads

அமைப்பு

விக்கிரம சோழன் உலா 342 கண்ணிகளால் அமைந்தது கண்ணியென்பது இரண்டு வரிகளைக் கொண்டது. இவற்றுள் முதல் 43 கண்ணிகளில் விக்கிரம சோழனின் முன்னோர் பெருமையும், விக்கிரம சோழன் பிறப்பும், பள்ளியெழுதல், நீராடல், இறைவனை வணங்குதல் போன்றவை கூறப்படுகின்றன.

44 முதல் 51 வரையான கண்ணிகளில் சோழன் அலங்காரம் செய்து கொள்வது கூறப்படுகின்றது. 52 முதல் 67 வரையாண கண்ணிகள் சோழனுடைய பட்டத்து யானையின் பெருமை கூறுகின்றன. 90 ஆவது கண்ணி வரை உலாவில் சூழ வரும் சிற்றரசர்கள் போன்றோரின் விவரங்கள் கூறப்படுகின்றன. கூடவரும் பரிவாரங்களைப் பற்றியும், அவர்கள் கூறுவது பற்றியுமான கண்ணிகள் 112 வரை இடம்பெறுகின்றன. பின்னர் ஏழுவகைப் பெண்களைப் பற்றியும், அவர்கள் சோழனைக் கண்டு காதல்கொண்டு வருந்துவது பற்றியும் கூறும் கண்ணிகள் தனித்தனியாக இடம்பெறுகின்றன.

Remove ads

காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads