விக்கிரமசிங்கபுரம்

From Wikipedia, the free encyclopedia

விக்கிரமசிங்கபுரம்map
Remove ads

விக்கிரமசிங்கபுரம் அல்லது வி. கே. புரம் (ஆங்கிலம்:Vikramasingapuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதலாம் நிலை நகராட்சி ஆகும்.[3] இந்த ஊர் சிங்கை, பாபநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள்

இது அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இந்த இடம் "பொதிகை மலை" என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ளது. மேலும் இது தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள அகஸ்தியர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது.

Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.67°N 77.33°E / 8.67; 77.33 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொழில்

இந்த நகரம் பச்சை நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. 1940க்கு முன்னர் இந்த பகுதியில் விவசாயமே முதன்மை வணிகமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெரும்பான்மையான மக்கள் மதுரா கோட்ஸில் பணிபுரிந்தனர், இது பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பஞ்சாலை ஆகும்.

கோயில்கள்

  1. பாபநாசநாதர் கோயில் - தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்களாநாதர், உலகம்மையுடன் உள்ள சிவாலயம். இது நவ கைலாயங்கள் என அழைக்கப் பெறும் ஒன்பது நவக்கிரகங்களுக்கான சிவன் கோயில்களில் முதலாவது கோயிலாகும். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத பாவங்கள் கூட தீர்ந்து விடும் என்பார்கள். இதனால் இந்த ஊரைப் பாவநாசம் என்றும் அழைப்பதுண்டு.
  2. சிவந்தியப்பர் கோயில். நகரின் மையத்தில் அமைந்துள்ள சிவங்தியப்பர், வழியடிமை கொண்ட நாயகி உள்ள சிவாலயம்.
  3. வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்.
  4. உழக்கரிசி விநாயகர் ஆலயம்.
Remove ads

பள்ளிகள்

  1. பாபநாசம் தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப்பள்ளி
  2. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி
  3. திரு இருதய உயர்நிலைப்பள்ளி
  4. அமலி மகளிர் மேனிலைப்பள்ளி
  5. ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்

  1. திருவள்ளுவர் கல்லூரி

சிறப்புகள்

  1. சிங்கைப் பிரபந்தத் திரட்டு எழுதிய நமச்சிவாயக் கவிராயர் வாழ்ந்த ஊர் இது.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads