விடாமுயற்சி
2025 இந்தியத் தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விடாமுயற்சி (Vidaamuyarchi) என்பது மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா,[6] அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2025 பெப்ரவரி 6 அன்று வெளியானது. 1997இல் வெளியான ஆங்கிலத் திரைப்டமான பிரேக்டவுன் திரைப்படத்தின் கதையை ஒத்துள்ளது.[7]
முதன்மைப் புகைப்படக் காட்சிகள் அக்டோபர் 2023 இல் தொடங்கியது. பெரும்பாலும் அசர்பைஜானில் படமாக்கப்பட்டது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Remove ads
நடிகர்கள்
இசை
பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார். இது அனிருத், மகிழ் திருமேனி ஆகியோரின் முதல் கூட்டணியாகும். வேதாளம் (2015) விவேகம் (2017) திரைப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் மூன்றாவது தடவையாக இணைந்துள்ளார்.[8]
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "'மினிமலிஸ்ட்டிக் ஹீரோயிச'த்தை ஈடுகட்டியிருக்க வேண்டிய விசாரணைக் காட்சிகள், திடுக் திருப்பங்கள் போன்ற மேஜிக்குகள் எதுவுமின்றி பொட்டல்காடாய்க் காட்சியளிக்கிறது இரண்டாம் பாதி. ரெஜினாவின் நம்பவே முடியாத பிளாஷ்பேக்கில் வரும் மைண்டு கேம் மட்டுமே ஒற்றை 'பாலைவனச் சோலை' ஆறுதல்! விடாமுயற்சியைத் திரைக்கதையிலும் காட்டியிருந்தால் 'விஸ்வரூப வெற்றி' கிடைத்திருக்கும்!" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[9]
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads